பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.க. செல்லப்பா


சி.மணியின் 'கவிதை நினைவுகள்' குறிப்பிடப் பெற வேண்டிய மற்றொரு அருமையான கவிதை. பரிகாசமும், சிந்திக்க வைக்கும் கருத்தாழமும் கொண்ட படைப்பு:4 பகுதிகள் கொண்டது. (எ.61)

இருக்கின்ற பாலோ
இருவருக்குத் தான்
அளவோ குறையாது மூவர்
அருந்த வேண்டுமென்றால்
நீரைக் கொட்டி
சரிக்கட்டுவாள்,
பாலின் சுவை கெடுப்பாள்
அளவைப் பற்றிய கவலை
இல்லையென்றால்
நல்ல பாலைத் தருவாள்.

2வது பகுதியில். 'மரபின்துய பருத்திச்சட்டை, கவர்ச்சியான தோற்றத்துடன்,களிப்பூட்டும் பலவண்ணங்களிலும், கண்கவரும் பல வகைகளிலும் கிடைக்கும் - நம்பிக்கையான பெருங்கடைகளில் என்பதனால் பலரும் 'அளவெடுத்து' சட்டையையே வாங்கினார். சிலருக்கு அது அமைந்தது. சிலருக்குப் பொருந்தவில்லை. அநேகருக்கு எப்படி எப்படியோ இருந்தது. என்றாலும் மரபு முத்திரையில் மயங்கி அதை வாங்குவதிலேயே பலரும் ஆர்வமாக இருந்தார்கள். சிலர்மட்டும் அதுசரியாக இல்லையெனத் தெரிந்ததும், வேண்டியதுணியை வாங்கிக் கொண்டு போய், 'உடலுக்குத்தக்கபடி, தைத்தார் சட்டை.'


3

ஒங்கு திரைப் பெருங்கட லுலகத்துமாந்தர்
வீங்குமுலை வருத்திடை மகளிரை மருவுவார்
இலங்குஞ் சோளிசேலை குழல் தமைக் கண்டதும்
மனங்கொடா ரோரிழி அலியிட மன்றோ?
சிறப்பான யாப்பிட்ட பனுவ லென்னும்
விரசஞ்சேர் வாளிள் மங்கை யிருக்க
யாப்பற்ற புதுக்கவிதையை யெப்படி
கைப்பற்ற துணிந்தா ரைம்புல னொப்பி?

260