பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அழிக்கப் பார்க்கிறீர்கள். எஸ். வைதீஸ்வரன் அமெரிக்காவை தாக்கி ஆனால் அதன் பின் வாழ்விலிருந்தே ஒடுகிறார் என்பது. ந.பி.யின் வாழ்வியல் பார்வை புதுக் கவிதைக்கு சட்டாம் பிள்ளையா என்ன? கவிதைக்கு தாக்கிது போடுவது வேறு ஒரு 'இஸம்' பார்வையில், கவிதைப் பொருள் பொன்னகரம், அமெரிக்கா, வியட்நாம் புதிய உழவுக்கருவிகள் இவற்றோடு மட்டும் நிற்காது. கவித்வ பார்வையில் இவைகளை பார்ப்பதிலும் எத்தனையோ கோணங்கள், வாழ்வியல் பார்வைகள். புதுமைப்பித்தனின் முப்பந்தைந்துவருஷத்துக்கு முந்திய பொன்னகரத்தையே இன்றும் நகல்கள் எடுத்துக்ெ காண்டிருப்பது பொன்னகரத்தை அழிப்பது இல்லை. பொன்னகரத்தை வளர்ப்பதாகும். ஏன், பொன்னகரம் அழிக்கப் படவேண்டாம். பொன்னகரங்கள் நிறைய வேண்டும் என்கிறாரா அன்பர்? புதிய உழவுக் கருவியை கீழே போடுவதா என்றால் கம்யூட்டரை எதிர்ப்பானேன்? அன்பின் வாழ்விலிருந்தே ஒரு கவி தப்பி ஓடுகிறார் என்றால், அன்பு வழியில் முன்னேற்றம், தீர்வு தேடாமல் கொடுரம், வெறுப்பு மூலம் நக்ஸல் பாரி வழியை கவிதையில் காட்டுவானேன்? ஆகவே கவிதை கிட்ட இந்த 'நான்விரும்புகிற சமுதாயபிரக்ஞை' மனப்பான்மையை கொண்டு வராமல் இருந்தால் தற்கால கவிதை பிழைக்கும்.

சி.சு.செ.

281