பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————சி.சு. செல்லப்பா

காரியங்கள் செய்யப்பட்டிருக்க கூடாது. எண்ணிப் பாராமல் மக்கள் செய்து விட்டார்கள். இத்தகைய பலாத்காரத்திற்குப் பதிலாக நான் கருதும் வகையிலான அகிம்சையின் வீரத்தைக் காட்டியிருப் போமாயின், முன்னேற்றம் இன்னும் அதிகமான தாகவே இருக்கும்.இந்த வகையில் நாசவேலை நடவடிக்கைகள் நாட்டின் சுதந்திரத்தைப் பின்னுக்குக் கொண்டுவந்து விட்டன" என்று காந்திஜி ஹரிஜனில் 10.2.1946ல் எழுதினார். காந்தியத்தைப் பின்பற்றும் தி.ஜ.வும் நடராஜனும் வேறு எப்படி ஆகஸ்ட் புரட்சியைப் பற்றி பேசியிருப்பார்கள்? மொட்டை மாடிப் பேச்சு என்கிறீர்கள்! இங்கேயிருந்து கொண்டே வியட்நாம் நச்சரவங்களுக்கு ‘நம்பிக்கையின் கீத மிசைக்கப் படுக்கையில்' இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒருதேசியப் போக்கைப் பற்றி, இந்த நாட்டைச் சேர்ந்தவன், இந்த நாட்டிலேயே ஆக்க பூர்வமான வழிகளில் முன்னேற்றத்துக்குப் பாடுபடுபவன், இங்கேயே பேசுவதில் என்ன தப்பு? என்ன கேலி? மீகாயில் ஷோலகோவின் நோபல் பரிசு பெற்ற ‘டான் அமைதியாக ஓடுகின்றது’ நாவலில் கூடக் கதாநாயகன் கிரிகோரியின் தந்தை பன்ட் டேலி ப்ரோக்கோஃபிவிச் (Pantele: Provokfveujch) மார்க்கெட்டில் நின்று கொண்டு சொல்கிறான். ஆஸ்திரிய ஜார் எல்லைக்கு வந்து, ஓரிடத்தில் எனது பகடைகளை சேகரித்து மாஸ்கோவையும் பீட்டர்ஸ் பர்க்கையும் நோக்கி நடத்திக் செல்ல உத்தரவிட்டிருப்பதாக நம் முடைய கிரிகோரி எழுதியிருக்கிறான் என்று சொல்கிறான். அதற்குப் பிறகும் பேச்சு தொடர்கிறது. வியாபாரம் நடத்தும் இடத்தில் நடக்கிறதே என்று நான் கேலி பண்ண ஆரம்பிக்கவா? நீங்கள் சொல்வது....

ராஜலக்ஷ்மி : நாவலை ஆசிரியர் நளினமான நடையில் எழுதியிருக்கிறார். எதிர்பாராத சஸ்பென்ஸ் கதை இல்ல இது. தூய இலக்கியப்போக்கு தென்படுகின்றது. இனிய தமிழ் நடை காந்திஜி இறந்த சமயத்தை எழுதுகிறார், 'கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. விலைமதிக்க முடியாத பொருள் போய் விட்டது. விற்பதற்கும் வாங்குவதற்கும் என்ன இருக்கிறது என்று புல்லரிக்க வைக்கிற எழுத்து. மேலும் நடராஜன் அரசியல், ஆத்மிகம் என்று தி.ஜ. வாய் மூலம் கேட்டறிகிறான். இந்த இடங்களிலெல்லாம் ஆசிரியர் ஜாக்கிரதை உணர்வுடன், தானே பேசுவது போல் அமைந்து விடாது, பாத்திரசம்பாஷணையில்ஓர்லயிப்பு ஏற்படுத்தும்விதத்தில்எழுதுகிறார்.

286