பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


மதிப்பை எடுத்துக்கொண்டாலும், 'நாமிருவரும் இவ்வுடலில் சதிபதிகளல்ல. சரீர இச்சை வேண்டாம்' என்கிற போது, தாம்பத்ய வாழ்க்கையில் உடலுறவுக்கு 'சரீர இச்சை' என்பதற்கு எவ்வளவு புறக்கணிக்கத்தக்க, குறைந்தபட்ச இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. இதுவும் இன்று 'பிளேடானிக்' காதலா, புலன்களுக்கு உரியதாக இல்லாத, ஆத்மார்த்தமான காதலா என்று இடக்கான கேள்விக்கு உரியதுதான். சதையுணர்ச்சிக்கு மிதமிஞ்சிய மதிப்பு கொடுத்து, ஆண்பெண் உறவு அதையே வைத்துத்தான் என்று கீழ்த்தரமான காமவேட்கை ஒரு கடைக்கோடியிலே படைப்பில் சித்தரித்துக் காட்டப்படுக்கையில் மறு கோடியிலேஅதுக்கு எதிராக சரீர ஸ்பரிசமே இல்லாமல் தாம்பத்ய உறவு இருக்க வேண்டும் என்பதுக்காக வலியுறுத்தப்படுவது இது என்று ஆகாது. கு.ப.ரா.வே. பின்னால் ஒரு கட்டுரையில் ('சதைப்பற்றற்ற காதல்' பாரத தேவி 30.7.1939) 'சதை என்ற சேற்றில் முழுக அல்ல, அதற்கு மேலே போய் தாமரையைப் போலத் தலையெடுத்து நிறக, இரவும் பகலும் போலவும் துக்கமும் சுகமும் போலவும் வேற்றுமை கொண்டிருக்கும் ஸ்திரீ புருஷ சுபாவங்களை ஒன்றாக்க என்றும் ‘உடற்சேர்க்கையை விட மனச்சேர்க்கையே புனித உள்ளங்களுக்கு அதே பெருத்த கலவி இன்பத்தைக் தரும்' என்றும் ‘அருகாமைகூட காதலுக்குத் தேவையில்லை. பிரிவாற்றாமையில் காதல் வளர்கிறது, விரகே பிரேம ராசி பவதீ’ என்று காளிதாஸன் கூடச் சொல்லி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிற மாதிரி சீக்கிரமே அழியக்கூடிய அலுக்கக்கூடிய ஒரு உறவுக்கும் அப்பால் நீடித்து நிலைக்கும் ஒரு உறவு இருக்கக்கூடும் என்பதை இந்த சிறுகதை தத்துவ மதிப்பாக வைத்திருக்கிறார் கு.ப.ரா.

‘மலரும் மணமும்' கதையில் விதவைப் பெண் செல்வம் ராமதாலை நேருக்கு நேர் காண தினம் மெய்மறந்து நிற்பதும் ‘முள்ளும் ரோஜாவும்' கதையில் உடலழகு என்னும் பொய்ப்படுதா கமலம கண்களை மறைத்து கணவனின் ஆத்ம வனப்பை அறியாமல் செய்து விட்டதும் இரண்டும் உடல் இச்சையை முன்வைத்து நின்ற பாத்திரச் சித்தரிப்புகள். கு.ப.ரா. நோக்கு இந்த கதைமூலம்உடல் இச்சை திருப்தி சாத்யமாகாத நிலையிலும் உறவை காப்பாற்றிக் கொண்டு வாழ்க்கையை நிறைவான தாக்கிக் கொள்ள முடியும் என்பது.

263