பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


அவரது இந்த முதல் சிறுகதையை எடுத்துக்கொண்டு சிறுகதை இலக்கியத்துக்கு அது அளித்த பங்கை பார்ப்பதாஎன்று வருகிறபோது எனக்கு அது சரியா என்று சந்தேகம் ஏற்படுகிறது. இதுவரை இந்த கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டகதாசிரியர்களில் ஒரு சிலரது முதல் கதையை வைத்தும் மற்றவரது பின் கதைகளை வைத்தும் பார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது எந்த கதை பங்கு செலுத்தியதாக கருதமுடிகிறதோ அந்த கதைகளே எடுத்துக்கொள்ளப்பட்டது. அதே போலத்தான் சிதம்பரசுப்ரமண்யன் சம்பந்தமாகவும் முறை கையாள உத்தேசம்.

சிறுகதை மணிக்கொடிக்கு வந்தவர்களுக்கு ஏற்கெனவே வேறு பத்திரிகைகளில் கதைகள் எழுதி கைப்பழக்கம் ஏற்பட்டிருந்தது. முன்னரே கிடைத்த வாய்ப்பு, சிறுகதைக்கலை சம்பந்தப்பட்ட நுட்ப விவரங்களை அறிய எழுதிய கதைகளின் குறை நிறைகளை தன் அனுபவத்தில் தெரிந்து கொண்டு மணிக்கொடிக்கு வருகிறபோது கொஞ்சம் எழுத்து சாமர்த்தியம், சாதுர்யம் வாய்ந்தவர்களாக இருக்க சாத்யமாக்கி இருந்தது. அதனால் குறிப்பிடும்படியான கதைகளை அதில் அவர்கள் எழுத முடிய, நாம் பார்க்க முடிந்தது உடனேயே. ஆனால் சிதம்பர சுப்ரமண்யன் மணிக்கொடியிலேயே பிறந்து நடை பழக வேண்டி இருந்தது. 'வாழ்க்கை முடிவு' முதல் ஏழு கதைகளுக்குப் பின் வந்த எட்டாவது கதையான வேலையும் விவாகமும் (13.11.1937) கதையையே நான் இங்கு எடுத்துக்கொள்கிறேன். சிதம்பர சுப்ரமண்யன் தன் முதல் சிறு கதை தொகுப்பு 'சக்ரவாகம்' முக்கு கதைகளை தேர்ந்தெடுக்கையில் இந்த எட்டுக் கதைகளில் மேலே குறிப்பிட்ட கதையும், இன்னும் ஒன்று, ஆக இரண்டு மட்டுமே சேர்த்திருக்கிறார். அந்த மற்ற கதைகள்தான் நடைபழகிய கதைகள் என்று அவர் மதித்திருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்.

சிதம்பர சுப்ரமண்யன் மணிக்கொடியில் நடை பழகினாலும் பிறந்த இட விசேஷத்தாலும் உலகவெளி மொழிக்கதை பரிச்சயத்தாலும் ஆரம்பத்திலிருந்தே சிறுகதைக் கலை அவருக்கு பிடிபட்டிருப்பது இந்த ஆரம்பக் கதைகளிலேயே தெரிகிறது. உத்தி நடை இவைகளில் தான் மெருகு ஏறவேண்டி இரந்ததேதவிர சிறுகதைக்கான அளவு நிதானம் படிந்திருப்பதும் தெரிகிறது. முதல் கதை 'வாழ்க்கை முடிவில்' ‘மீனாஷீயின் வாழ்க்கையிலே அநேக

300