பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/311

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

படிக்கவும் உணர்கிறோம். இதே மாதிரி, தமிழில் தலை சிறந்த பத்து கதைகள் தேர்ந்தெடுத்தால் அதில் ஒன்றாக இருக்க வேண்டிய 'ஊர்வலத்தில்' என்ற அவரது இன்னொரு சிறுகதையில் 'ஊர்வலம்' மூலை திரும்பிற்று. பாண்டு கோஷ்டியார் தாரினி தெலுசுகொண்டி’ என்ற கீர்த்தனத்தை முடித்து விட்டு நிறுத்திக் கொண்டார்கள் என்று ஆரம்பம். 'பாண்டு கோஷ்டியார் நாடகமே உலகம்' என்ற பாட்டை வாசித்துக் கொண்டு போயினர் ஊர்வலம் மற்றொரு மூலை திரும்பிற்று’ என்பது முடிவு. இந்த உத்தி அற்புதமான சாதனை காட்டி இருக்கிறது அந்த கதையில்.

படைப்புக் களத்துக்கு அறிவு முக்யமா உணர்ச்சி முக்கியமா என்று கட்சி வாதம் செய்யும் மனப்பான்மைக்கு இந்தகதை ஒரு நல்ல உணர்த்தல். இரண்டுக்கும் சம நிலை இங்கு காணப்படுவது மட்டுமின்றி ஒன்று மற்றதுக்கு உதவி ஒருசுத்தமான நினைப்போட்டம், தூய உணர்ச்சிப் போக்கு ஒரு நெறியான தத்துவப் பிடிப்பு எல்லாம் கதாபாத்திரங்களிடமிருந்து வெளி வருவதும் தெரிகிறது.

அநேகமாக மணிக் கொடிக் கதைக்காரர்கள் எல்லோரும் ‘ரிஃப்ளெக்டிவ்' எங்கிறோமே சிந்திரிக்கிற, முன்னும் பின்னுமாக மனதை ஒடவிடுகிற, நுட்பமாகமன வோட்டத்தை தொடர்கிற, மாடு அசைபோடுவது போல் மனதின் சிக்கலான கலப்பான, ஆழமான உணர்வுகளை ஆழத்திருந்து மேல் தளத்துக்கு கொணர்ந்து திரும்பத் திரும்ப உரைத்துப் பார்க்கிற விதமான எழுத்துப் போக்கை கடைப் பிடிப்பவர்கள் என்பதை இதுவரை குறிப்பிட்ட கதைகளிலிருந்தே நாம் யூகிக்க முடியும். நூருன்னிஸாவின் கதாநாயகன் தானே நினைப்பதாக கதைவழி, இதில் கதாசிரியர் சாட்சியாக வர்ணித்த முறையேயானாலும், கதாபாத்திரம் மனப்போக்குப் பாங்காகவே சித்தரிப்பு தோரணை.

நடை சிக்கனமாக பிரயோகம், சின்னச் சின்ன வாக்கியங்கள். ‘சீக்வன்ஷியல்’ என்கிறோமே அறாமல் பின் தொடர்கிற வரிசைக் கருத்தமைப்பு வாக்யங்கள். இதுக்கெல்லாம் உதாரணம்.

‘வண்டி நகர்ந்து வேகமெடுக்க ஆரம்பித்தது. அவசரமாக ஒடிவந்து ஏறினான் ஒருவன். ஏறின வேகத்தில் குஞ்சிதத்தை இடித்துக்

304