பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


ஒருநாள்கணக்குப்போடும்பொழுது குலாம் என்சிலேட்டைப் பார்த்து காப்பியடித்துவிட்டான். அதெப்படி வெளியாயிற்று என்றால் நான் பிசகாய்ப் போட்டிருந்த வழி அவனுடைய சிலேட்டிலும் காணப்பட்டது, உடனே உபாத்தியாயர் நான் காப்பியடித்தேன் என்று என்னைப் பிரம்பால் அடித்தார்.

குலாம் சாயந்திரம் வீட்டுக்குப் போகும் பொழுது என்னைக் கைதட்டிக் கூப்பிட்டான்.

‘நீ ஏன் என்மீது குற்றம்சாட்டவில்லை' என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.

அவனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியாது.

‘அடே, என்னோடு எங்க மோட்டாரிலே எங்க ஆட்டுக்கு வா. அப்புறம் உங்க வூட்டுலே கொண்டு விடறேன்' என்றான்

காரில் ஏறினோம். காரில் சவாரி செய்ய வேண்டுமென்ற என் ஆசை பூர்த்தியாயிற்று. பதினைந்து நிமிஷத்தில் தென்னூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டு வாசலுக்குள் போய் நின்றது.

கயாஸூடின் ஸாஹேப் ஒரு பெரிய வர்த்தகர். ஆர்க்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்தவராம். வீட்டின் முன் ஹாலில் பிரம்மாண்டமான வெல்வெட்டுத் திண்டுகள் போட்டுச் சாய்ந்து கொண்டிருந்தார். எதிரில், ஹாக்காவும் எச்சிலுமிழும் பாத்திரம் ஒன்றும் இருந்தன. எங்கே பார்த்தாலும் நிலைக்கண்ணாடிகள். பெரிய பெரிய மொகலாயப்படங்கள். பளிங்கு மயில் ஒன்றில் செருகப்பட்டிருந்த ஊதுவத்திகளிலிருந்து வாசனை கம்மென்று வீசிற்று. காலுக்கு மெத் தென்றிருந்த ரத்தினக் கம்பளங்கள் தரையில் விரிக்கப் பட்டிருந்தன.

குலாம் குதித்துக்கொண்டுபோய் அவரிடம் ஏதோ சொன்னான். பிரமித்துப் போயிருந்த என்னைப் பார்த்து அவர் 'இங்கே வா' என்று கூப்பிட்டார். பிற்காலத்ததில் நான் மெளலானா ஷௌகத் அலியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் எனக்கு வரும். குலாம் என்னை அவரிடம் இழுத்துக்கொண்டு போனான். அவர் என்னைத் தடவிக் கொடுத்துக் கொண்டே தன் மனைவியைக் கூப்பிட்டார். உள்ளே இருந்து அந்த அம்மாளும் அவளுடைய இரண்டு பெண்களும்

308