பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

சி.சு. செல்லப்பா, டேவிட் சித்தையா, சேதுராமன், ஆர். பிரசாத், ஐசக் அருமைராஜ் டி, பாக்கியமுத்து, தயானந்தன் பிரான்சிஸ் குறிப்பிட்ட படைப்புக்களைத் திறனாய்வு செய்தார்கள்.

நாவல் சிறுகதை இரண்டிலும் அன்றைய, இன்றைய போக்குகள், வளர்ச்சிகளும் தடைகளும், கருப்பொருள்கள், விமர்சன பாதிப்பு, பிரசாரத்துக்கான இடம், சமுதாயத்தோடு தொடர்பு, ஆசிரியன் ஆளுமை, உத்தி. கதை அம்சம், பத்திரிகைகளின் பங்கு - இவைகளைப் பற்றிய சிந்தனைகள் பரவலாக வெளிக் கொணரப்பட்டது இந்தக்கருத்தரங்கின் பயனாகும். எழுத்தாளர்கள். வாசகர்கள், விமர்சகர்கள், பத்திரிகாசிரியர்கள், பேராசிரியர்கள் என்று பலதரப்பட்டவரின் கண்ணோட்டமும் ஒருங்கு சேர்ந்தது அந்தப் பயனைப் பெருக்குவதற்கு உதவியது.

இந்தக் கருத்தரங்கில் ஓர் உண்மையும் வெளிப்பட்டது. இலக்கியச் சிந்தனைகள் பல முனைகளில் எழுவது தவிர்க்க முடியாதது, சில சந்தர்ப்பங்களில் சந்திக்க முடியாததும் கூட என்பதுதான் அது. படைப்பில் பிரசாரம் என்பது குறித்தோ விமர்சனத்தின் பயன் என்பது குறித்தோ முடிவில்லாமல் விவாதிக்கலாம். ஆனால், இலக்கியத்தின் புது வகைகள் பெருகி, படைப்புக்கள் பற்றிய பார்வைகளும் விரிந்த பின்னரும் கூட, அடிப்படைவிதிகளிலும், சில்லறைச்சங்கதிகளிலும் வாதம் எழுப்பிக் கொண்டிருப்பது வளர்ச்சிக்கு வழி செய்யாது. விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழிலே வெளிப்படுத்தும் பாங்கினை அனைவருமே ஏற்றுக் கொள்ளும்போது, போக்கு (trend) தொற்றவைப்பது படிமம் (image) போன்ற சொற்களைக் காதில் வாங்கவே மறுப்பது விசித்திரமாக இருக்கிறது. சரியான சொற்கள் காலப் போக்கில் வழக்கில் நிற்கும். ஆரம்பத்திலேயே குறுக்கு வெட்டுப் போடுவதால் சிந்தனைதான் தடைப்படும்.

பவர்

பவர் அமைப்பின் முதல் ஆண்டுவிழா ஜனவரி மாதம் 17, 18 தேதிகளில் இலக்கியக் கூட்டங்களில் புதுஅனுபவமாக நடந்தேறியது. கருத்தரங்கம் என்று போடாமல் 'கணக்கெடுப்பு' என்று நிர்வாகிகள் திட்டமிட்டு, சிறு கதை, நாவல், கவிதை, விமர்சனம் நாலுக்கும்

316