பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

பணியின் பயன் புரியும். இலக்கிய அக்கறையோடு செய்யப்படும் விமரிசனங்களைப் புறக்கணித்ததின் விளைவு, புறஅக்கறைகள் அளவுகோல்களாகத் தலைதூக்கி, ஜெயகாந்தன் போன்றவர்கள் புதுப் பார்வைகளில் சிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இலக்கியப் பார்வைகள் வலுத்தால் புறப்போர்வைகள் விலகிப் போகும் என்பதற்கு ஆருடமா சொல்ல வேண்டும்?

பட்டிமன்றம்

பிப்ரவரி 5,12,19 தேதிகளில் ஒய்.எம். சி.ஏ. பட்டிமன்றம் நடத்திய கூட்டங்கள், புதிய இலக்கியம் பற்றி சிந்தனைகள் வெளிப்பட, தொடர்ந்த வாய்ப்பாக அமைந்தது. சமீப ஆண்டுகளில் அங்கு தற்கால இலக்கியம் பரவலாகப் பேசப்படுவது இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.

ந.சிதம்பர சுப்ரமண்யன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ‘நாவலின் அமைப்பு' பற்றி டாக்டர் எஸ். கணேசன் பேசியது, 'பவர்' அரங்கில் காலம் கருதி சொல்ல முடியாததை வெளிப்படுத்தும் வாய்ப்பை அவருக்கு அளித்தது. படைப்பாளிகள் கூட சிந்திக்காத அளவுக்கு நாவலின் வகைகள், தன்மைகள் பற்றி அவர் ஆராய்ந்து வைத்திருக்கிறார்.

சி.சு.செல்லப்பா தலைமையில் தமிழில் விமர்சனம் பற்றி நடந்த கூட்டத்தில் எழில் முதல்வன், டாக்டர் கணேசன், பேராசிரியர் சுப்ரமண்யம் ஆகியோர் உரையாற்றினர். விமர்சனம் பற்றி பத்திரிகைகளும் மன்றங்களும் தற்சமயம் காட்டும் அக்கறைகளுக்கு


ஒலிபெருக்கி

சி.சு. செல்லப்பா

இசை அலறும்
எரிமலை வாய்;
பேச்சு நொறுங்கும்
கல்லுடை ரோலர்;
ஜவ்வைத் தீய்க்கும்
கொல்உலை எஃகுக்கோல்.


322