பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்திரிகையும் அதன் தன்காலம், சூழ்நிலைக்கு ஏற்ப இலத்திய சோதனை முயற்சிகளில் இறங்கியவைகள்தான். அந்த மரபு வழியில் வரும் எழுத்து இன்றைய சூழ்நிலை, பரப்பு, வீச்சு போக்குக்குக்தக்கபடி தன்னை உருவாக்கிக் கொண்டு வெளிவருகிறது என்பதைத்தான் குறித்துச் சொல்லைத் தோன்றுகிறது.

இன்றைய போக்குகளை எழுத்து எப்படி பிரதிபலிக்கும், எதிர்காலப் போக்குக்கு என்ன வகை செய்யும், சென்றகாலப் போக்குகளை எவ்வாறு மதிப்பிடும் என்பதுதான் இந்த முயற்சியின் முன் உள்ள கேள்வி. அதற்கு உள்ள பதில்களை இந்த ஏடு ஆரம்பித்து, வரும் ஏடுகள் தொடர்ந்து சொல்லும். மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக் கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில் பழக்க முறையாகிவிட்ட ரீதியிலேயே கருத்துக்களையும் அலுக்கும்படியாக, ஒரே விதமாக கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில், மக்களுக்கு இன்னின்னவைகளை கொடுத்து, பிடிக்கச் செய்ய வேண்டும், புதுப் புது விதமாக நோக்கும் பார்வையும் கொண்டு வெளியிட்டுச்சொல்ல வேண்டும் என்ற ஒரு நினைப்பு ஒரு மொழி இலக்கியத்துக்கு அவசியமானது. அந்த நினைப்புடன் எழுத்து ஏடுகள் பெருகும்.

எழுத்து என்ற வார்த்தைக்கு அகராதி ரீதியாக அக்கரம், இலக்கணம், கல்வி, கையெழுத்து, ஆதாரச் சீட்டு, ஓவியம் என்றெல்லாம் விளக்கம் இருந்தாலும் ‘இலக்கியப் படைப்பு’ என்ற அர்த்தத்தில் தான் பெயர்தாங்கி வருகிறது இந்த ஏடு. இதனால் அம் மொழி பற்றிய பலவித அக்கறைகளை எழுத்து ஒதுக்கி விடும் என்பதல்ல. மொழியும்இலக்கியமும் இசைந்து சமநடை போட்டுச் செல்லும் வகையாக செயல்படும்.

இலக்கிய அபிப்ராயங்களை எடுத்துச்சொல்வதில் சிறப்புகளை மட்டும் எடுத்துச் சொல்வதுடன் நின்று விடுவது ஒரு வகை. குறைகளையும் சேர்த்துச் சொல்வதுமற்றொரு வகை. குறைகளை மட்டும் எடுத்துச் சொல்வது மூன்றாவது வகை. இந்த மூன்றில் முதலாவது பாராட்டாக நின்று விடுவது. மூன்றாவது கண்டனமாக மிஞ்சுவது. இரண்டும் விமர்சனம் அல்லது திறனாய்வு என்ற ஆராய்ச்சி எல்லைக்கு அப்பாலேயே நின்று விடுபவை. நடுவகையான, நிறை-குறை இரண்டையும் எடுத்துக் காட்டும் ஒரு

31