பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

உதாரணங்களாக, ஸாமர்ஸெட் மாம், ஏ.இ.கோப்பார்டு, இர்வின் ஷா முதலியவர்களைச் சொல்லாம்.

மேலை நாட்டில் தோன்றிய இச் சிறுகதை இலக்கிய வளம் இருபதாம் நூற்றாண்டிலே, இந்தியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் புது இலக்கியத்தில் இந்திய உருவமும், சீன உருவமும், ஜப்பானிய உருவமும் எடுத்தது. சென்ற முப்பது வருஷங்களில் ஜப்பானியச் சிறுகதை பிரமாதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சீனத்துச் சிறு கதை ஆரம்பத்தில் பிரமாதமான வளர்ச்சி பெற்று, அரசியல் காரணங்களினால், சோஷலிஸ் யதார்த்தாவதம் என்கிற குட்டையிலே (இலக்கிய உத்தியிலே) வந்து தேங்கிவிட்டது. சிறுகதைக்கு இந்திய உருவம் தருகிற முயற்சியை ரவீந்திரநாத்தாகுர்சிறப்பாகச் செய்தார்.

தாகுரின் சிறுகதை முயற்சியை வ.வே.சு. ஐயரும், கவி சுப்பிரமணிய பாரதியாரும் பின்பற்றினார்கள். வ.வே.சு. ஐயர் ‘குளத்தங்கரை அரச மரத்தில் தாகுர் செய்த காரியத்தையே ஓரளவு தமிழில் வெற்றியுடன் திரும்பவும் செய்து பார்த்தார். அவர் எழுதிய மற்றக் கதைகளிலும் அவர் ஓரளவுக்குப் பிறர் செய்ததையே பின்பற்றினார். எனினும் ஓரளவு வெற்றி பெற்றார் என்பதனால் தமிழில் சிறுகதைக்கு வ.வே.சு. ஐயரைத்தான் தந்தையென்று சொல்லுவது வழக்கமாகி விட்டது. கவி பாரதியாரின் கதைகளைச் சிறுகதைகள் என்று சொல்லமுடியாது. வெறும் கதைகளாகவே சொன்னார் அவர். ஆங்கில, பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளையும், தாகுர் சிறுகதைகளையும் அறிந்தேதான் பாரதியார் தன் கதைகளை எழுதினார். ஆனாலும் உருவத்தை விட அவருக்குச் சீர்திருத்தக் கருத்திலே மோகம் அதிகமான படியினாலே, அவர் கதைகள் சிறு கதைகளாகவும் கூட அமைதி பெறவில்லை. உதாரணமாக பாரதியாரின் பூலோக ரம்பையைச் சொல்லாம். அற்புதமான ஒரு கதையை உருவம், அல்லது ஒரு உருவமல்லாத பிரக்ஞையுடன் செய்யாமல் வழிந்தோட விட்டுவிடுகிறார் பாரதியார். இந்தக் குறை மாதவையாவின் குசிகர் குட்டிக் கதைகளிலும் உண்டு என்றுதான்சொல்ல வேண்டும்.

சிறுகதை என்பதற்கு அடிப்படையாக அதை ஒதுகிற வனுடைய இலக்கிய உருவப் பிரக்ஞை அமைய வேண்டும்.

46