பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது,அல்லது அதிகமாக ஆழ்ந்து பார்க்கும் போதும் கூட, இவ்விஷயம் ஒரு உருவமல்லாத உருவமாகவே இருக்கலாம். ஆனால் அந்த உருவமல்லாத உருவத்தையும்கூட, குணத்தையும் விசேஷத்தையும் கூட, உணர்ந்தே, இலக்கியப் பிரக்ஞையுடன் செய்திருக்கிறான்.ஆசிரியன் என்பதுதான் அதைச் சிறுகதையாக்குகிறது. சிறுகதையின் ஆரம்பம், நடு, முடிவு என்பதைப் பற்றிச் சொல்வது இப்போது விளையாட்டுக்கும், கேலிக்கும் இடமாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் சிறுகதை என்கிற இலக்கியத் துறையில்அடிப்படையான விஷயம். இந்த ஆரம்பம், இந்த நடு, இந்த முடிவு தான் வேண்டும் என்பது முன்கூட்டி நிச்சயமானதல்ல - ஆனால் அது ஏற்பட்ட பின், அது தவிர்க்கமுடியாதது என்கிற உணர்வு விமர்சகர்களுக்கும் வாசகனுக்கும் ஏற்பட வேண்டும். இந்த உணர்வை ஏற்படச் செய்பவனைத்தான் இலக்கியத்தித்தில் சிறுகதாசிரியன் என்று நாம் கொண்டாட முடியும். நடை அழகு, விஷயத் தெளிவு, அமைதி முதலியனவெல்லாம் இலக்கியப் பரப்பில் எல்லாத் துறைகளுக்குமே பொதுவானவை. ஆனால் சிறுகதை உருவமும், உருவ அமைதியும், தவிர்க்கமுடியாத தன்மையும் (inevitability), ஒருமைப்பாடும் சிறுகதைக்கு மட்டும் உரியது. இதை எப்படி விமர்சகன் முதலில் தேர்ந்து புரிந்து கொள்ளுகிறான் என்பதும், வாசகர்கள் எப்படித் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு வகையாக இனங்கண்டு கொள்ளுகிறார்கள் என்பதும், இலக்கிய விமர்சனம் சரியாக வளராத இக்காலத்தில், தமிழில் தெளிவாக்குவது சற்றுச் சிரமமான காரியம்தான்.

இலக்கிய விமர்சகன் என்று, என்னைப் போல சொல்லிக் கொண்டுவருபவன், இதைத்தன் படிப்பையும், பிறமொழிச்சிறுகதை அறிவையும் வைத்துக் கணித்துக் கொள்ளுகிறான் என்று மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு உதாரணமாக இன்று பழக்கமான ஆசிரியர்கள் சிலருடைய சிறுகதை உருவங்கள் பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கு தர முயலுகிறேன். உருவமேயல்லாத பலவித கதை உருவங்களை நமக்குச் சமைத்துத் தந்திருப்பவர் என்று வில்லியம் லரோயனைச் சொல்லலாம்; பாதரஸத்தைப் போலக் கைக்கடியிலிருந்து நழுவிவிடும் உருவம் பெற்றவை அவர்கதைகள். உருவமில்லாதது போன்ற, ஆனால் அலசிப் பார்த்தால் நல்முத்துப்

47