பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்வளர்ச்சி

பொதுவாக இத்தனையும் சொன்னபிறகு தமிழில் சிறந்த சிறு கதைகள் என்கிற விஷயத்துக்கு வருவோம்.

வ.வே.சு. ஐயருக்குப் பிறகு தமிழில் சிறுகதை வளர்ந்த சரித்திரம் அநேகமாக நம்மில் எல்லோருக்குமே தெரியும். மூன்று பிரிவுகளாகத் தற்காலத்திய கதை வளர்ச்சியை நாம் கணிக்கலாம். (ஒன்று இலக்கியத்துறை என்று எதிலும் அடங்காத கதை முயற்சிகள். இம்முயற்சியில் தலை சிறந்தவர்கள் என்று அ. மாதவையா, டாக்டர் சாமிநாதய்யர் (நினைவுக் கதைகள்) எஸ். வி. வி., ராஜாஜி முதலியவர்களைச் சொல்லலாம். இந்தக் கதைகளில் கருத்தால், விஷயத்தால், அவரவர்கள் மனோதர்மப்படி முக்கியத்துவம் தந்து கொள்ளலாம். இலக்கிய ரீதியாக முக்கியத்துவம் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது உதாரணமாக, விதவைகளை

மோரியாக்

'எழுத்தார்களிலே இரண்டே இரண்டு ரகங்கள் தான் உண்டு நல்ல எழுத்தாளர்கள் நன்றாக எழுதாதவர்கள் என்று இரண்டு ரகங்கள் தான் உண்டு. இதைத் தவிர வேறு பாகுபாடுகளே தேவையில்லை என்று ஃரான்ஸ்வா மொரியாக் என்கிற ஃபிரெஞ்சு நாவலாசிரியர் ஒரு தரம் கூறினார். அவர் இலக்கியத்துக்காக நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர். இன்றைய இலக்கிய உலகத்தின் நல்ல எழுத்தார்களில் ஒருவர்.

எங்களுடைய லகவிய சிருஷ்டிகளால் சாதாரண மனிதர்களின் வாழ்விலே ஒரு தெளிவு ஏற்படுகிறது. தங்கள் உள்ளப்பாங்கைத் தாங்களே அறிந்து கொள்ளச் சாராரண மனிதர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். எங்கள் எழுத்தின் பலன் இதுதான் என்றார். அவர் இன்னொரு சமயம் கத்தோலிக்க மத சம்பந்தமான விஷயங்களில் ஒரு அழுத்தமும், பழமை என்று சொல்லப்படுவதில் அசையாத நம்பிக்கையும் உள்ள நாவலாசிரியர் மொரியாக். நல்லது கெட்டது என்கிற தத்துவங்கள் வாழ்விலே நடத்துகிற போராட்டத்தை இன்றைய நாவலாசிரியர்களிலே அதிக திடமாகவும், தீர்மானமாகவும் வர்ணிப்பவர் அவர்,தெரஸே, தெரியாத கடல், கறுப்புத் தேவதைகள், ஃபிரான்டநாக் குடும்ப மர்மம், அன்புள்ளவரும் அன்பில்லாதவரும் முதலியன அவருடைய சிறந்த நாவல்களில் சில.

49