பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

துரையில் யாராவது நன்றாயிருக்கிறது என்று சொன்னாலும் கதையைத் தேடிப்படிக்கிறேன் என்பதனால், அப்படிப்பட்ட ஒரு கதாசிரியன் பெயரையும் நான் விட்டுவிடவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் இந்த இருபத்தைந்து முப்பது வருஷங்களில்தமிழ் இலக்கியத்தில் சிறு கதைத் துறையில்ஒரு வளம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வளத்தைச் சொல்லுகிற அளவில் சிறு கதைத் தொகுதி ஒன்று வெளியிடுவதானால் அதில் கட்டாயமாக புதுமைப்பித்தன், மெளனி, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமணியன், லா.ச.ராமாம்ருதம், தி.ஜானகிராமன், கு. அழகிரிசாமி இந்த எட்டுப் பேருடைய சிறுகதைகளும் சேரும், இவை தவிர சி.சு. செல்லப்பா, க.நா. சுப்ரமண்யம், தி.ஜ. ரங்கநாதன், கி. ரர். த.நா. குமாரஸ்வாமி, சங்கரராம் முதலியவர்களுடைய சிறுகதைகள் இரண்டாம் பக்ஷமாக இடம் பெறலாம். இதிலே சுந்தர ராமஸ்வாமி, ஜெயகாந்தன் இருவருடைய சிறுகதைகளையும்சேர்த்துக்கொள்ளலாம். தமிழ்ச் சிறுகதையில் இலக்கிய வளத்தைக் காட்ட இப்படிப்பட்ட ஒரு தொகுப்பு பிரயோஜனப் படலாம்.

குறிப்பிட்ட ஆசிரியர்களுடைய எந்தெந்தக் கதைகளைச் சேர்த்துக்கொள்வது என்பது பற்றி விசாரிக்க வேண்டியது அவசியம் அதையும் பின்னர் செய்து பார்க்கலாம்.



சிறுகதைகள், சிட்டி என்ற புனைபெயரில் ஹாஸ்யக் கட்டுரைகள், கவிதைகள், வில்லி என்ற பெயரில் கிண்டல் கவிதைகள் சென்ற30 வருஷ காலமாக தமிழிலும் இங்கில் திலும் எழுதி வரும் சுந்தரராஜன் 1910ல் மதுை ரஜில்லாவில் உள்ள நத்தம் கிராமத்தில் பிறந்தவர். அந்திமந்தாரை என்ற சிறுகதைத் தொகுதியும், ‘கண்ணன் என் கவி என்ற பாரதி, கவிதை விமர்சனமும் ஹர்ஷன் என்ற நாடகமும் வார்தா திட்டம் என்ற கல்வி முறை புஸ்தகமும் வெளியாகி இருக்கின்றன. பல ரேடியோ நாடகங்கள் எழுதி இருக்கிறார்.பள்ளி ஆசிரியராகவும் பத்திரிகைக்காரராகவும் வேலைபார்த்திருக்கும் அவர் இப்போது மத்திய அரசாங்க ஊழியராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.


57