பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

கூச்சம். சந்தடி அதிகம் இல்லாத கல்யாணியின் வீட்டைத் தாண்டிப்போகும் பிச்சைக்காரிக்கு வியப்பாகவே இருந்தது. அழைத்து அறம்புரியும் மனிதர்கள் கூட இருக்கிறார்கள் என்பதை அவள் அறியாமலில்லை. ஆனால் தன்வரவுக்காக உணவும் கையுமாக காத்திருப்பார்கள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

‘அம்மா, என்தெய்வமே மகராசி, நல்லா இருக்கணும் நீ. வயிறாரச்சோறு போட்டையே. மக்களைப்பெற்று நல்லாவாழனும்' என்று பிச்சை போட்ட கல்யாணியை அவள் வாழ்த்திச் சென்றாள்.

எப்பவும் சிந்தனையிலாழ்ந்த கல்யாணிக்குக் கூட சிறிது புன்முறுவல் தோன்றிற்று. மனதிற்குள் தன்னையே பரிகசித்துக் கொண்டு கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஏதோ மயக்கமாய் வரும் போலிருந்தது. மாலையிலிருந்தே ஒரு மாதிரி அஜீர்ணமாக விருந்தது. பித்தம் அப்படித்தானிருக்கும்; சாப்பிடு’ என்று பாலம்மாள் வற்புறுத்தி சாப்பிடச் செய்துவிட்டாள். சாப்பிட்டது தவறு என்று இப்பொழுது கல்யாணிக்குப்பட்டது. வயிற்றில் ஏதோ சங்கடம். முற்றத்திற்கு விரைந்தாள்.

வாயைக் கொப்பளித்து விட்டு வாசல் பக்கம் வந்தாள். முகமெல்லாம் வியர்வை அரும்பி இருந்தது. கதவைத்திறந்து வைத்துக் கொண்டு காற்றாட உட்கார்ந்தாள். சினிமாவுக்குப் போயிருந்த ஒண்டுக்குடித்தன தம்பதிகள் லீலும் கிருஷ்ணனும் வரும்போது எப்படியும் கதவைத் திறக்க வேண்டும். துங்கிவிட்டால் கஷ்டம். சிறிது நேரம் உட்கார்ந்திருப்போம் என்று எண்ணினாள்.

அடுத்த வீட்டுக் கதவுதிறக்கும் ஓசை கேட்டது. மறு நிமிஷம் பாட்டி வந்தாள்.

‘ஏண்டி கல்யாணி’ உடம்புக்கு என்ன?

ஒண்ணுமில்லை பாட்டி, என்னமோ சாப்பாடு ஒத்துக்கல்ல.

‘என்ன சாப்பாடோ என்ன ஒத்துக்கறதோ போரும்போ. நீ ஒண்டியாய் சமைக்கிறதும் சாப்பிடறதும் ...ஏன் படுத்துக்கிறது தானே...

... 'போகனும் நீங்க தூங்கிட்டேள்னு மாமி சொன்னாளே'

‘எனக்குத்தூக்கம் எங்கேடிவரப்போறது. பெரியதுக்கம்தான் வரணும்.'

59