பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

“கூடிய சீக்கிரம் அவள் பிறந்தகம் போக வேண்டுமென்று பாட்டி சொன்னதுதான். கல்யாணியின் சிந்தனைப் பந்தலில் ஊடுருவி அவளைத்தாக்கிவிட்டது.

பிறந்தகத்திற்கா? நல்ல கொடுமை. அந்தத் துணையைவிட இந்தத் தனிமை மேலல்லவா? தனித்திருக்கத்தானே கல்யாணி பிறந்தாள். கன்னியாயிருந்த போது குடும்பப் பொறுப்பை மேற்ெ காண்டாலும் அவளுக்கு அதிக தோழிகள் கிடையாது. தன் சிந்தனைகளுடனே தான் உறவாடி வந்தாள். எவ்வளவு கற்பனை களோ எவ்வளவு ஆசைகளோ அவளோ அவைகளைச்சரியாக நேர் நின்று பார்த்ததில்லை. அடங்காத குழந்தைகளை குளிப்பாட்டி, உணவூட்டி, படுக்கவைக்கும் முறையில் அந்த எண்ணங்களை அவள் கையாண்டாள்.

மணமான பிறகுதான் என்ன, அதே நிலைதான். இப்பொழுது மூன்று வருஷ தனிக்குடித்தனத்தில் 7 ஆம். குறைந்தது இரண்டு மாத்திற்கொரு முறையாவது கணவனுடன் பேசியிருப்பாளே...

பாட்டி கதவைத் திறந்தாள். கிட்டு நேரேதன் அறைக்குப்போய் விட்டான். லீலு பாட்டியிடம் ஏதோகேட்டாள். பாட்டி ரகசியமாய் ஏதோ சொல்லிவிட்டு ஆம் நாளை கார்த்தாலே மறந்துடாதே” என்றாள்.

கல்யாணிதன் விழிப்பு நிலையைக் காட்டிக் கொள்ளவில்லை. தன் சிந்தனைகளுடன் சதுரங்கம் தொடர்ந்தாள். ஏன். தன் கணவன் தனக்கு ஒரு குறையும் வைக்கவில்லையே. சமீப காலத்தில் தன்னை நன்றாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறான். வீலு கூட கேட்டிருக்கிறாள்.

‘வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிக்கொண்டு வருகிறாரே என்று. வாங்கி வரத்தான் செய்கிறான். ஆனால் வேலையையும் கூடக் கொண்டு வருகிறானே. மாதத்தில் நாலு நாள் கூட வீட்டுச்சாப்பாடு இன்றி அலைந்துவிட்டு வீட்டுக்கு வரும் போது கூட காகிதக் கட்டுடன் வந்தால், பாவம் காம்ப் முழுவதும் சுற்றிய பிறகு கஸ்பாஆபீஸுக்கு வந்துதானே.வேலையை முடிக்கவேண்டும். அவன் வேலையில் ஈடுபட்டிருக்கும்பொழுது கல்யாணி தொந்திரவு செய்யமாட்டாள்.

64