பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அறையில் லீலுவும் இட்டுவும் நெடுநேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஏன் நாகராஜன் கூடத்தான் கல்யாணியுடன் அன்று நாள் முழுதும் பேசிக்கொண்டிருந்தான். காலை மூன்று மணி வரை பேசிக்கொண்டிருந்தார்கள். அநேகமாய் இம்முறை காம்ப் இருக்காது என்று நாகராஜன் சொல்லிக்கொண்டிருந்தான். காலை ஆறுமணிக்கே ஆபீஸர் வீட்டிலிருந்து ஆள் வந்தான்.

மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள். உடனே அன்றே காம்ப் கிளம்பவேண்டும் என்று உத்தரவு நாகராஜன் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.இது புதிது என்று சொல்வதற் கில்லை. சமுதாய நலமகாநாட்டின்போது மூன்று மாதம் வெளியூரில் இருந்தது இல்லையா....

லீலுவும் கிட்டுவும் பேசி முடித்து விட்டார்கள். பாட்டியின் குறட்டையைத் தவிர எங்கும் மெளனமே நிலவிற்று. அந்த அமைதிக்கு நடுவில் கல்யாணியின் எண்ணங்கள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. எவ்வளவோ முயன்றும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தன் கணவன் நாகராஜன் எங்கு இருப்பான் என்று நினைத்துப் பார்த்தாள். எங்கு இருந்தாலும் அவனும் தூங்கமாட்டான். ஏதோ காகிதங்களைப் புரட்டிக் கொண்டிருப்பான்.

கல்யாணியின் நிலையைப் பற்றி அவன் அறிந்தால் என்ன செய்வான்?

என்ன செய்வான். மீண்டும் காம்ப் போய் விடுவான். அதுதானே அவன் சுபாவம், தர்மம் என்று யாரோ பரிகசித்ததுபோல் கல்யாணிக்கு பிரமை. திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

ஒருநாளும் தான் நாகராஜனை ஹிம் சித்தது இல்லையே. என்றோதற்செயலாய் அவன் வீட்டிலிருக்க நேர்ந்ததில் அம்மா இந்த விளைவா. தெய்வமே. பிறர் கொடுத்து வைத்து அனுபவிக்கும் சந்தோஷம் வேண்டுமென்று அவள் நினைக்கத் துணிந்ததில்லையே. வழக்கம் போல் நாகராஜன் காம்ப் போப்க்கொண்டிருந்தால்... கல்யாணி மீண்டும் தன் தாய் வீடு செல்ல வேண்டாமே. பாட்டி பெருமைப் படுகிறாள். மாமியின் மலர்ந்த முகம் இன்னும்

65