பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

இலக்கிய விமர்சன முறைகளைக் கையாண்டு இலக்கியத்தின் நோக்கம், வேலை, மதிப்புகள், பயன் ஆகிய விசேஷ குறிகளை முன் வைத்து ஒரு நூலை அவிழ்த்துப் பார்த்து, நயம் கண்டு, சிறப்பியல்புகளை விசாரணை மூலம் வெளிச்சொல்லும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதைப் பின்பற்றிச் செல்லுவதில் நாம் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. நயம் அறிவதற்கு, தரத்தை நிர்ணயிப்பதற்கு எத்தகைய அளவு கோலும் தேவையில்லை என்ற கட்சிவாத மனப்பான்மை நம்மிடமிருந்து அழிந்து போகச் செய்ய, அன்று மற்ற தேச இலக்கியங்களில் செய்யப் பட்ட தீவிர முயற்சிகள் நாம் இன்று செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

விமர்சன முறைகள்

ஒரு இலக்கிய நூலை அணுகும் இலக்கிய விமர்சனம் எத்தனையோ கேள்விகளில் ஒன்றை முதன்மையாகக் கொண்டு பார்க்கிறது.தத்துவ ஞானம், வேதாந்தம், அடிப்படையில் ஒரு மனோதர்ம இலக்கியம் எத்தகைய சித்தாந்தத்துக்கு விளக்கமாக அமைந்திருக்கிறது என்று பார்ப்பது ஒரு முறை மட்டமானதிலிருந்தும் கெட்டதிலிருந்தும் பிரித்து, நல்லதை எடுத்துக் காட்டும் வழியாக, லக்ஷணங்களைக் கொண்டு தர நிர்ணயக் கேள்வியும் கேட்கலாம். இன்னும், அதற்கென உள்ள ஒரு குறிப்பிட்ட மதிப்பு (Value) சம்பந்தமாக முடிவுகட்ட ஏதுவாக பிரத்தியேக உத்தி முறைகளைக் கொண்டு அந்த இலக்கிய நூலை விண்டுபார்த்து மெய்ப்பிக்கலாம். ஒரு இலக்கியப் படைப்பில் மனோதத்துவம் எவ்விதம் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது, இந்த இலக்கிய நூல் எத்தகைய ஒரு மனோதத்துவ நிலையில் அதாவது எழுதியவனின் மனப்போக்கின் வழியில் - எழுந்து உருப்பெற்றிருக்கிறது எனவும் ஆராய்வதற்கு உரியது. நூலில், சமூகத்தின் போக்கு எவ்விதம் பிரதிபலிக்கிறது, எத்தகைய சமூக குணங்கள் அதை பாதித்திருக்கின்றன, எழுதியவனின் சமூக ஆசாரம் பற்றிய விசாரணை என்று சமூக சாஸ்திர ரீதியாகவும் பார்ப்பதுண்டு.

இதோடு சம்பந்தப்பட்டது கலாசாரம் பொருத்தம் பார்க்கும் முறையாகும். ஒரு இலக்கிய நூலையோ ஆசிரியரையோ சரியாக அறிந்து கொள்ள அந்த உடனிகழ்காலத்துக்கு(Contemporary) நம்மை மன மாற்றிக் கொண்டு சரித்திர முறை வழியே ஆராய்ந்து பார்த்து

70