பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

ஒரு வேண்டுகோள்

இந்த எழுத்து ஏடு உங்களுக்கு திருப்தி அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குத்தெரிந்த இலக்கிய வாசகர்களுக்கு சிபாரிசு செய்யுங்கள். அவர்கள் முகவரியை எனக்கு எழுதி அனுப்புங்கள். அவர்களுக்கு எழுதுகிறேன். இது பெரிய ஒத்தாசை

- சி.சு. செ.

விபூதியாம் பெருங் கடலுள் ஒரு அலையுள் ஓர் நுரையுள், ஓர் அணுவை யானெடுத்து அதனுள் என் புல்லறிவிற் கெட்டிய மட்டும் புகுந்து பார்த்து.... தூண் பிளந்துதோன்றிய அவனே அங்கும் இருக்கக்கண்டு திசை திறந்தண்டங்கீறிச் சிரித்தசெங்கட்சீயத்தைக் கண்டு கைகூப்பி ஆடிப்பாடியரற்றி உலகெலாந்துள்ளித் துகைத்த இளங்சேயொப்ப யாமும் ஆடிப்பாடி ஓடவேண்டுமென்பதே யன்றி வேறன்று.

‘பொன்னம்மாளது சூழ்வினையிலும், சங்கரியது கொலைத் தொழிலிலும், சுப்புவின் கலகத்திறத்திலும், நடராஜனது விவரமறியா இளமையிலும், ராமசேஷய்யரது வாஞ்சாரூபமான முதுமையிலும், லட்சுமி ஸ்ரீநிவாசனது மனோ தர்ம விசேஷத்திலும், கமலாம்பானது பக்தி வைபவத்திலும் முத்துசாமியப்யரது ஆத்மானந்தத்திலும் எங்கும் சமமாய், சாட்சியாய், ஏகமாய் பூரணமாய், நித்தியமாய்....” உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகெங்கும் நாம் காண்போம்.... கமலாம்பாளைப் போல புத்தியலறி யொண்ணாப் புராணன்ன பக்தியாம் வலையிற்படுத்து.. அருட்தாகங் கொண்டு அவரது மனகோசார மான அவ்வடி நிழலில் ஓய்வடைவோம்.

‘இவ்வுலகில் உழன்றுதவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மலமான ஒரு இன்பநிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்.

‘கடவுள் எல்லாவற்றிக்கும் அந்தம். எல்லாம் கடைசியில் அவனையே அடைகின்றன. என்ன நேர்ந்தாலும் அவைகள் எல்லாம் நமது நன்மைக்கே என்பதையும், நாம் அநுபவிக்கும் தண்டனைகள் கடைசியாக தமக்கு நன்மையாகவே முடியுமென்பதையும் உணர்ந்து கர்மாவில் ஈடுபடுவது அவனை அடையும்படியான சுருக்கு வழி.

76