பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்று அப்பொழுது புரிந்ததில்லை. பிற்காலத்தில், மழையைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டியது, மழையின் பயனைப் பற்றித்தான் என்று தெரிந்து கொண்டேன். மழைபெய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் அல்லவா? மழை பெய்கிறது என்று நாம் அறிந்துகொள்வது ஒரு உண்மை (Fact). ஆனால் அந்த மழையினால், பயிர் நன்கு விளையும் நமக்கு உபகாரமாகும் என்பது மதிப்பு (Value). .

மின்சாரம் என்ற சக்தியை ஒருவன் கண்டு பிடிக்கிறான். மற்றொருவன், மின்சாரத்தை ஜனங்களுக்கு உபயோகப்படும் படி செய்கிறான். அவன் அதற்கு மதிப்பை (Value) உண்டு பண்ணுகிறான்.

மனிதன் ஒருவனுக்குத்தான் அறியும் சக்தி இருக்கிறது. அடையவேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது. அடைந்தபின் அனுபவம் என்ற பேறு அவனுக்குக் கிடைக்கிறது.

ஒரு பொருளை ஒரு மனிதனே, பலதரப்பட்ட பயன்களில் அதுபவிக்கவும் கூடும், மலை வாசம் செய்யும் பொழுது, திடீரென்று ஒரு நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடிக்கிறான்.மனிதன். இது(Fact) உண்மை. இந்த நீர்வீழ்ச்சியை மின்சாரத்திற்குப் பயன்படுத்தலாம் என்று யோசிக்கும் பொழுது ஒருவித மதிப்பு (Value) ஏற்படுகிறது. அது இல்லாமல், என்ன அழகான நீர்வீழ்ச்சி என்று அதன் அழகை அதுபவிக்கும் பொழுது அதுவும் ஒரு பயன்தான் (Value). ஆனால் இது வேறு தினுசான பயன்.

பயன்களிலே பல வகைகள் இருக்கின்றன. அவைகளை வரிசைப்படுத்திப் பார்க்கலாம்.

வாழ்க்கையிலே மனிதன் தன் வாழ்விற்கு அனேக பொருட் சாதனங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கிறான். இவைகள் பொருளாதாரப் பயன்கள் (Economic Value)

இந்த பத்திரிகையின் பொறுப்பு ஏற்றிருக்கும் சி.சு.செல்லப்பா மதுரை ஜில்லா வத்தலக்குண்டில் 1912ல் பிறந்தவர். 'ஸ்ரஸாவின் பொம்மை’, ‘மணல்வீடு ' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் அவருடையவை வெளியாகி இருக்கின்றன.

87