பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்து கொள்ளவில்லை. புரசைஎஸ். ரங்கநாதனுக்கு சொந்தமான ராஜீவ் பிரிண்டிங் பிரஸ்சில் எனது முயற்சியினால் வேலைசெய்து 98 ஜூன் மாதம் மறைந்தார். அவரது உடல் கேட்பாரற்று ஒருவாரம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிந்து மனம் வருந்தினோம். தினமணியில் இவரது மறைவுச் செய்தி வெளிவந்தும் உறவினர்கள் யாரும் வரவில்லை. நக்கீரன் கோபால் மூலம் முயற்சித்து வந்தவர்கள் இதோ வருகிறேன் என்று பின்பு எட்டிப் பார்க்கவில்லை. உயிரோடு இருக்கும் பொழுது இவரது அண்ணன் மகன்கள் வந்து பயன்பெற்றார்கள் என்பதுதான் இதில் சோகமான நிகழ்வு. தீபம் அச்சகத்தில் சிம்சன் கம்பெனியின் தொழிலாளர்களின் யூனியன் பத்திரிக்கை சங்கநாதம் உப்பிலி சீனிவாசனை துணை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. கணையாழியும் முதல் முதலில் கஸ்தூரிரங்கன் மேற்பார்வையில், அசோகமித்திரன் (ஜ, தியாகராஜன்) அவர்கள் பொறுப்பாசிரியராக தீபம் அச்சகத்தில்தான்.அச்சிடப்பட்டது. தீபம் அலுவலகமாடியில் பவர் என்ற அமைப்பின் மூலம் அடிக்கடி இலக்கியக்கூட்டங்களை நா.பா. நடத்தினார். இந்த அமைப்பில் அசோக மித்திரன் முக்கிய பணிகளைச் செய்தார். - - நா.பார்த்தசாரதியின் உறவினர்.திரு. ஆர்.அனுமந்த் கோவிந்த ராஜ் அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அவர் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மாலை வேளையில் தினந்தோறும் தீபம் அலுவலகத்திற்கு வருவார். அவர் தீபம் நிர்வாகத்தின் ஆங்கிலக் கடித போக்குவரத்தை கவனித்துக் கொண்டார். மேலும் அவர் குடும்பத்தின் முன்னோர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள். அதனால் அவரும் கதர்தான் அணிந்திருப்பார். நா.பா.விற்கு காமராஜ் அவர்களை அறிமுகப் படுத்தியவர் இவர்தான். மயிலை மாங்கொல்லையில் முதன் முதலில் சிந்தனையாளர்மன்றம் என்றஅமைப்பைகாங்கிரஸ் சட்ட சபைக் கட்சி அலுவலகத்தில் ஏ.என். சிவராமன் தலைமையில் நா.பா. தொடங்கி நடத்தி வந்தார். மறைந்த புலவர் வெ. புகழேந்தி காரியதரிசியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நா.பா. பேசினார். இதன்பிறகுகால வெள்ளத்தில் அடிப்பட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 1980 களில் நா.பா.வின் மூத்த மகள் பூர்ணியின் திருமணமும், மகன் நாராயணனின் பூநூல் அணிவித் தலும் தி.நகரிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் மூன்று