பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இ)-(எழுத்து உலகின் நட்சத்திரம் 'தீபம்' நா. பார்த்தசாரதி) உயரிய எழுத்துத்திறமையும் இலக்கிய கம்பீர்யமும் உள்ள இடத்தில் வசதிக் குறைவும் போதிய பொருள் வளமின்மையும், வசதியும் போதிய பொருள் வளமும் உள்ள இடத்தில் தகுதி அறியாமையுமாக இருக்கிறது நிலைமை. பத்திரிகைகள் நாவலுக்குப் பத்தாயிரம், சிறுகதைக்கு ஐயாயிரம், ந ாடகத்துக்கு நாற்பதாயிரம் என்று அறிவிக்கும் இலக்கியப் போட்டிகள் எல்லாம் படாடோபமாகவும், எழுத்தாளனை அவமானப் படுத்துவனவாகும் உள்ளன. போட்டி முடிவுகளிலும், பரிசுத் தேர்வுகளிலும் பட்சபாதகமான நீதிபதிகளின் தீர்ப்புகள் வெளியாகின்றன. எழுத்தாளர்கள் இனத்தின் இலக்கிய கெளரவத்தை காப்பாற்றும் விளைவுகள் பெரும்பாலும் இந்தப் போட்டிகளால் ஏற்படக் காணோம். - * * , பத்திரிகைகளில் தமிழ் எழுத்தாளனின் எழுத்துச் சுதந்திரத்திற்கும் குறைவான இடம் தான் உண்டு. கதாநாயகன் சிகரேட் பிடிப்பதாகவோ, அல்லது மதுஅருந்துவதாகவோ, ஒரு பெண்ணிடம் முறைதவறி நடக்க முயன்றதாகவோ - ஒரு கதையில் கற்பனை செய்தால்-'வரவர இந்த ஆள்ரொம்ப 'சீப் ஆக எழுதத் தொடங்கி விட்டான். - என்று நினைக்கிற மனப்பான்மை சிலரிடம் இருக்கிறது. கண்முன்னால் நாம் காண்கிற யதார்த்த வாழ்க்கையிலே, புகை பிடிக்கிறவன், யாருக்கும் தெரியாமலே திருட்டுத்தனமாக மதுஅருந்துகிறவன், மனைவியை அடித்து நொறுக்கிற முரட்டுக்கணவன், கணவனை அடிக்கிற ராட்சஸ் மனைவி, விபச்சாரம செய்கிற ஆண்மகன், அதே காரியத்தைச் செய்கிற பெண் மகள் எல்லாம் தான் இருக்கிறார்கள். இவர்களது குணங்கள் அல்லது அதிகுணங்கள் -இலக்கியத்தில் ஒரளவு இடம் பெறுவது எப்படித் தவறாகும். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்திலும் உள்ள மறைமுகமான யதார்த்த உண்மைகளைக் శ్రీ ! எழுத்துக்கு விஷயமாகத் தேடும் செளகரியமும், உரிமையும், அமெரிக்கா விலும், ருஷ்யாவிலும், பிரிட்டனிலும்,பிரான்ஸிலும் உள்ள எழுத்தாளனுக்கு இருக்கின்றன. தமிழ் எழுத்தாளனுக்கு அத்தனை சுதந்திரம் ஏற்பட்டு விடவில்லை என்றாலும் அவசியமான சில சின்னஞ்சிறு உரிமைகள் கூடக் கிடைக்க வில்லை. அசட்டுத்தனமான ஒரே வகைத்தியாகங்கள்.கல்யாண மாப்பிள்ளைத் தகராறுகள் முக்கோணக் காதல்கள் காலேஜ்