பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா.பார்த்தசாரதி - | கள் எப்படியோ முதலாளியின்காதுவரைஎட்டிவிட்டன. அவர் இந்த ஆசிரியர் ஊர் திரும்பியதும் இவரை அழைத்து, 'நீங்க என்னமோ'நான்தான் தலையங்கம் எழுதறேன்- அப்படி இப்படீன்னு ஊரெல்லாம் சொல்லிண்டு திரியறேளாமே? 'ஏதோ பெரியவருக்குத் தள்ளாத காலத்திலே அவருக்கு ஒத்தாசையாகப் பணிவிடைகள் செய்யலாம்னு கூட வரேன்: என்று தான் போகிற இடங்களில் சொல்லனுமே ஒழிய எழுதற தாக மூச்சு விடப்படாது. ஜாக்கிரதை 1 - என்று முதலாளியின் அதிகார உரிமையோடு எச்சரித்தாராம். உடனே உதவி ஆசிரியரும் பயந்து மெய் விதிர்த்து நடுநடுங்கி, 'புத்தி சார் இனிமே அப்படிச் சொல்லலை - என்று ஸ்ரண்டர் ஆனார். உண்மையில் தலையங்கம் எல்லாம் இவரே எழுதிக் கொண்டிருந்தும் கூட வெளியில் அதைச் சொல்லிக் கொள்ளக் கூடாது - என்று ஒடுக்கப்பட்டார். அடுத்த சில வாரங்களில் இவரைப் பழிவாங்கி ஒடுக்குவதற்காகப் பத்திரிகைத் தொழில் அனுபவமே இல்லாதவரும், சங்கராச்சாரியருடைய மடத்துத் திண்ணையில்துங்கிக் கொண்டிருந்தவருமான ஒரு இருபத்தேழு வயதுப் பையன் தலையங்கம் எழுத அமர்த்தப்பட்டார். அவர் வந்ததும் இவர் டிஸ் செய்யப்பட்டார். பெரியவரிடமிருந்து (சங்கராச்சாரியாருக்கும் இதே பெயர்தான்) வந்த பையன் சமஸ்கிருதமும் ஆஸ்திகமும் கலந்து கொழ கொழ தமிழில் எழுதிய அரசியல் விஷயங்கள் முதலாளியால் கொண்டாடப்பட்டன. அப்படிக் கொண்டாடப் பட்டதன் நோக்கம் முன்னாள் அரசியல் விஷயங்கள் எழுதிய வரை டிஸ் (அவமானம்) செய்ய வேண்டுமென்பதுதான் எனத் தெரியவந்தது. தி.ஜ.ர.வைப்போல் பரிபூரணமான் பத்திரிகைத் தொழில் ஞானமும் நிறைந்த தொழில்அனுபவங்களும் உள்ளவர்களைக் கூட வாழ்க்கையில் சகல செளகரியங்களையும் அடைய விடாத நாடு இது. பத்திரிகை முதலாளிகள் தான் வாழ்க்கையின் சகல செளகரியங்களையும் இங்கு அடைய முடியுமே ஒழிய உழைக்கும் பத்திரிகையாளர்கள் எந்த செளகரியத்தையுமே அடையமுடியாது போலிக்கிறது. - உழைக்கும் பத்திரிகையாளர்கள்அல்லது உதவியாசிரியர்