பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "šuti. நா. ਘਾੈ। } கடிதத்துக்கும் தவறாமல் பதில் எழுதுவார் நா.பா. அந்த பதில் கடிதங்களைப் பெறுவதற்கே எத்தனையோபாக்கியம் செய்திருக்க வேண்டும். - நண்பர்களுடன் கலந்துரையாடுவதில்அவருக்கு விருப்பம் அதிகம். இதற்காகவே தீபம் அலுவலகத்திலேயே பவர் என்ற அமைப்பை உருவாக்கிக் கூட்டங்கள் நடத்தியது நா.பா. அன்பர்களுக்கு நினைவிருக்கும். பிற்காலத்தில் அதே சிந்தனையோடு'திண்ணை என்கிற அமைப்பைத் தொடங்கி வைத்தார். அதன் முதல் கூட்டம் கலைஞர் கருணாநிதி நகரில இருந்த, என்னுடைய இல்லத்தில் தான் நடைபெற்றது. பெரியவர் சுனந்தர், சிட்டி, சோ. சிவபாத சுந்தரம், டாக்டர் விக்கிரமன், சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், தி.க.சி., பீஷ்மன், பால்யூ, இரா.சுராஜ், தொ.மு.சி. ரகுநாதன், - என்று அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை விரிவானது. திருப்பூர் கிருஷ்ணன், ஹிந்து நடராஜன் இல்லங்களிலும் நா.பா.வின் இல்லத்திலும் இந்தக்கூட்டங்கள் நடந்தன. 'அதிகம் பேர் வேண்டாம் சுப்ர-பாலன் ஐந்தாறு பேர் இருந்தால் போதும். அப்படி அழைத்தால் போதும்' என்பார். மனம் விட்டு உரையாடுவதற்கு ஏற்ற அமைப்பல்லாத அமைப்பாக அது விளங்கியது. . . - அவரிடம் ஒரு முக்கியமான பழக்கம் இருந்தது. அவ்வப் போது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறபோது, விமான நிலையத்துக்கு வழியனுப்பி வைக்கப் போவோம். அப்படிப் போய் வழியனுப்பியவர்கள் யாராயிருந்தாலும் அந்த வெளி நாட்டிலிருந்து ஒரு அஞ்சலட்டையாவது எழுதிவிடுவார். அதற்கு அவர்சொன்னகாரணம் சிந்தனைக்குரியது. 'சுப்ரபாலன்: எத்தனையோ வேலை இருக்கும். விட்டுவிட்டு நம்மை வழியனுப்ப வருகிறார்கள். அதற்காக நன்றி தெரிவிக்கிற மாதிரி இருக்கட்டுமே என்பார். - நா.பா.வின் கடைசி ஆண்டுகளில், அவர் எழுதிய நாவல்களையும், வேறு சில கதைகளையும், நா.பா.வின் மணிக் கையெழுத்து வடிவிலேயே படித்துப் பார்க்கும்பேறு பெற்றவர் களுள் நானும் ஒருவன். எனக்கு முன்பே நா.பா.வின் துணைவி யார் அதைப் படித்திருப்பார்கள். எங்களைப் படித்துப் பார்க்கச் சொல்வாரே தவிர, அபிப்ராயம் எதையும் கேட்கமாட்டார்.