பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-(எழுத்துஉலகின்நட்சத்திரம் தி நாபாத்தசாதி G54_}– :- @莎š நா.பா.வின் கேள்விக்கு ஏதோ பதில் சொன்னேன்.அவர், நீ இங்கு வந்து தீபம்'அச்சகத்தில் வேலைசெய்கிறாயா? என்று கேட்டார். உடனே சம்மதித்தேன். நா.பா. திருமலையை அழைத்து, என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளச் சொன்னார். - 'தீபம் ஆபிஸில் அதிக ஊழியர்கள் யாருமில்லை. நா.பா.வின் அத்தை மகனான எஸ். திருமலைதான் அங்கு நிர்வாகி. அவர்தான்சகலமும், பேப்பர், அச்சுமை வாங்குவதில் துவங்கி, தீபம் இதழை முழுவதும் உருவாக்கி முடிப்பது வரை எல்லாமே திருமலைதான் கவனித்துக் கொண்டார். அச்சுக் கோர்க்கும் இடம் அங்கேயே இருந்தது. ராஜதுரை என்கிற அன்பர் ஆலந்துாரிலிருந்து வருவார். பெரும்பாலும் அச்சுக் கோர்க்கும் வேலைகள் முழுவதும் அவரே தான் செய்வார். சில சமயங்களில் ஒத்தாசைக்கு ஒரு பையனோ, அல்லது ஒரு பெண்ணோ இருப்பதுண்டு. ஆனால், அடிக்கடி அவர்கள் காணாமல் போய்விடுவர். ராஜதுரை மட்டுமே அந்த அறையில், கருமமே கண்ணாக நின்று பணிபுரிவார். . 'தீபம் அச்சகம் நாலுதெரு தள்ளி, ஒரு தனிக்கட்டிடத்தில் இருந்தது. அங்கு மோகன் என்று ஒரு மிஷின் மேன் இருந்தார். பாரங்கள்.அச்சடிக்கும் டபுள்கிரவுன்சிலிண்டர்மிஷின் ஒன்றும், அட்டைப்படம் அச்சடிக்கும் டிரெடில் மிஷின் ஒன்றும் இருந்தன. மோகனுக்கு உதவியாக இரண்டொரு பையன்கள் மாறி மாறி இருந்து, வேலையை விட்டுப் போய் விட்டனர். அவருக்கு உதவியாக மேனேஜர் திருமலையே அடிக்கடி சென்று, தீபத்தின் பக்கங்கள் அச்சாகும் மிஷின் பின்னால் ஏறி அமர்ந்து, அச்சாகி வரும் தாள்களைச் சிதறாமல் அடுக்கும் வேலையைச் செய்வார். நான் போய்ச்சேர்ந்ததும் பெரும்பாலும் இந்த வேலையை நானே செய்தேன். இதன் விளைவாக நான் அந்தமிஷினை இயக்கும் வித்தையும் கற்றேன். பல சமயங்களில் மோகன் இந்த மிவினைத் தயார் செய்து, என்னை இயக்கச் சொல்லிவிட்டு, தெருவில் போய் நின்று சிகரெட் பிடித்தபடி யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார். - டிரெடில் மிஷினில் தீபம் அட்டைப் படங்கள் ஒவ்வொரு கலராக அச்சாகும். கட் கலர் மெத்தேடில் தான் அட்டைகள்