பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

93



கண்ணன்: சீமாலிகா வருக! வருக! (சீமாலிகன் பேசாமல் இருக்கின்றான்)

கண்ணன்: என்ன சீமாலிகா! என்ன நேர்ந்தது. ஏன் இவ்வளவு சோர்வு. மெளனம் ஏன்? என் நண்பனுக்கு யாரேனும் இடையூறு செய்துவிட்டனரா?

சீமாலிகன்: கண்ணா! வாய்ச்சொல் பேசி வஞ்சிக்க வேண்டா. உற்ற நண்பனிடம் உண்மையை மறைத்த உன்னைத் தவிர, உலகத்தில் எனக்கு இடையூறு செய்ய யாரால் இயலும்.

கண்ணன்: சீமாலிகா! இஃதென்ன விபரீதப் பேச்சு! உண்மையை நான் மறைத்தேனா? உன்னிடமா! சிறிது விளக்கமாகத் தான் சொல்லேன்!

சீமாலிகன்: ஒன்றும் தெரியாதவன் போல உரையாடாதே! முற்றும் கற்றுத் தந்து விட்டதாகச் சற்றும் கூசாது சாற்றினாயே! அந்தச் சக்கரப் பிரயோக வித்தையை ஏன் மறைத்து வைத்தாய்!

கண்ணன்: அப்பாடா! இவ்வளவு தானா என்னவோ ஏதோ என்று பயந்து போனேன். சக்கரப் பிரயோகம் கற்பது கடினம். இவ்வுலகில் என்னைத் தவிர வேறு யாரும் அதனை அறியார். அறியவும் முடியாது.

சீமாலிகன்: என்னால் முடியும். இப்போதே கற்றுத் தரல் வேண்டும். உண்மையான நண்பனாக இருந்தால் மறுக்காதே! உன் மேல் ஆனண!

கண்ணன்: சீமாலிகா! பதறாதே! அந்த வித்தை கற்பது ஆபத்தானது. உயிர்க்கே கேடு பயப்பது. ஆதலால், வேண்டாம். உன் நன்மை கருதியே சொல்கின்றேன். பிடிவாதம் செய்யாதே!

சீமாலிகன்: முடியாது. நீ கற்றுத் தரத்தான் வேண்டும். உனக்குள்ள திறமை எனக்கும் உண்டு. கற்றுத்