பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

71


என்று நாத் தழுதழுக்கக் கூறி உள்ளமெல்லாம் உருகி உடம்பெலாம் கண்ணீர் சோரக் கைகூப்பி நின்றார் குடிசைபாதி மட்டும் எரிந்து நின்றுவிட்டது

“நெருப்புருவம் கொண்டு. செந்நிறச் சுவாலையுடன் தோன்றிய நீ ஏன், முழுக்குடிசையையும் உன் வடிவாகக் காட்டாமல், பாதியுடன் நின்று விட்டாய்” என்று பரவசத்துடன் கூறினார் தமர் உகந்தது எவ்வுருவமோ அவ்வுருவம் தானே ஆகும் இறைவன், நாமதேவர் விரும்பியபடியே குடிசையின் மறுபாதியையும் எரித்து முடித்தான். நாமதேவர். இறைவனின் முழுத்தோற்றமும் கண்டோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்து நின்றார்.

அடியார் விரும்பினாலும், அவர்களைத் துன்புறவிடுவானா இறைவன் இறைவனே பணியாளாக வந்து, எரிந்து போன குடிசையை மீண்டும் அமைத்துத் தந்தான்.