________________
2 அமெரிக்கா என்பது புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட ஓர் உலகம். அதனைக் கண்டு பிடித்தவர் கொலம். பஸ் என்பவர். அப்புதிய உலகத்தில் ஆங்கிலேயர்கள் முதலிய ஐரோப்பிய நாட்டு மக்கள் குடியேறினார்கள். வட அமெரிக்கா முழுவதும் நாளடைவில் ஆங்கிலே யர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், பின்னர் அஃது இரண்டாகப் பிரிந்தது. அப்பிரிவுகளுள் வட பாகம் கனடா எனப்படும்; தென் பாகம் ஐக்கிய மாகாணங்கள் (United States) எனப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டது. ஐக்கிய மாகா- ணங்கள் சேர்ந்த தென் பிரதேசம்,ஆங்கிலேய- ரோடு போராடி, முடிவில் சுதந்திரப் பிரதேசமாக மாறிற்று. அதன் சுதந்திரத்திற்காகப் பாடு பட்டவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர். அவரே அப்பிர- தேசத்தின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந் தடுக்கப்பட்டவர். . கனடா ஐக்கிய மாகாணப் பிரதேசம் மிகவும் செழிப்பா- னது. இயற்கையில் அங்குக் கிடைக்கக் கூடிய பொருள்- களும், ஐரோப்பிய நாடுகளோடு வர்த்தகம் செய்ய ஏற்பட்டுள்ள வசதிகளும், நிலப் பரப்பின் வளமும், மக்களின் உழைப்பும், இக்குடியரசு செல்வத்திலும் நாகரிகத்திலும் வியாபாரத்திலும் கைத்தொழில்களி- லும் சிறந்து விளங்கக் காரணங்கள் ஆகும். இந்நாடு குடியரசைத் தாபித்த நூற்றைம்பது வருடங்களுக்குள் வெகு விரைவாக முன்னேற்றம் அடைந்துவிட்டது. இந்நாடு இப்பொழுது உலகில் உள்ள நாடுகளில் முதன்மை பெற்றதாகவும், கைத்தொழில், வியாபாரம்