பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3' ஆகியவற்றில் பெயர் பெற்றதாகவும், நிலக் கரியும் இரும்பும் எடுக்கும் உலகில் உள்ள நாடுகளில் முதன்மை பெற்றதாகவும், பிற நாடுகட்குக் கடன் கொடுக்கும் செல்வம் படைத்ததாகவும் இருந்து வரு- கின்றது. ஆதலால், சாதாரணமாக இப்பொழுது அமெரிக்கா, அமெரிக்கர்,' என்னும் சொற்களை ஐக்கிய நாடுகளையும், அங்குள்ள மக்களையும் குறிக்- கவே உலகத்தார் உபயோகிக்கின்றனர். .6 அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் குடியரசு பெற் றவையாதலின், அவற்றிற்கு அரசன் இல்லை. ஒவ்- வொரு மாகாணத்துக்கும் ஒரு கவர்னர் தலைவராக இருக்கிறார். அவருக்குக் கீழ்ச் சட்ட சபை ஒன்று உண்டு. அச்சபைக்கு அம்மாகாண மக்களால் பிரதி- நிதிகள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகின்றார்கள். ஒவ்வொரு மாகாணத்து உள் நாட்டு நிருவாகமும் அத- னதன் கவர்னரால் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்- வொரு மாகாண அரசாங்கமும், அம்மாகாண ஜனத் தொகைக்கு ஏற்றவாறு தகுந்த பிரதிநிதிகளைக் காங்கிரஸ் மகா சபைக்கு (American Congress) அனுப்புகின்றது. இந்த அங்கத்தினர் தேர்தல் இரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை நடைபெறுவது. இக்காங்கிரஸ் மகா சபைக்கு மேலாகச் 'செனேட்டு' என்றொரு சபை இருக்கின்றது. அதற்கு மாகாணத்- துக்கு இருவர் வீதம், ஆறாண்டுகட்கு ஒரு முறை, அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ்விரண்டு சபைகளும் அமெரிக்காவின் பொதுவான அரசியல் விஷயங்களைக் கவனித்து வரு-