________________
. கின்றன. எத்தகைய சட்டமும் மாறுதலும் இவ்விரு சபைகளிலும் ஆமோதிக்கப்படல் வேண்டும். இன்- றேல், அவை கவனிக்கப்படமாட்டா. இச்சபைகளால் நடைபெறும் ஐக்கிய மாகாண அரசாங்கத்துக்கு நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்- கப்படுகின்றார். அவர் தம் விருப்பம் போல மந்திரி சபையை அமைத்துக்கொள்ளலாம். சங்கடமான சந்தர்ப்பங்களிலும் அவசியமான காலங்களிலும் தலை வர் சட்ட சபைகளைக் கலந்த துகொள்ளாமலே சில கட்- டளைகளையோ சட்டங்களையோ பிறப்பிக்க உரிமை பெற்றுள்ளார். அமெரிக்காவில் குடியரசு ஏற்படுத்- தின ஜார்ஜ் வாஷிங்டனே பொது மக்களால் முதல் குடியரசுத் தலைவராகக் கி.பி. 1789-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.பி.1793-ஆம் ஆண்டி- லும் அவரே இரண்டாம் முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்ஙனம் விளங்குகின்ற ஐக்கிய அரசாட்சியில் ஜார்ஜ் வாஷிங்டன் காலத்தில் சில மாகாணங்களே இருந்தன. அவை யாவும் அமெரிக்காவின் கீழ்க்கரை ஓரமாகவே அமைந்திருந்தன. மேற்குப் பாகம் காடுகள் நிறைந்திருந்தது. அக்காடுகளில் அமெரிக்கப் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் அங்குமிங்குமாக வசித்து வந்தார்கள். குடியேறின வெள்ளையர் அவர்களை நகரங்களினின்றும் காடுகட்குத் துரத்திவிட்டனர்; அதனுடன் அமையாது, அவர்களைக் கொடுமைப்படுத். தவும் தொடங்கினர். பாவம்! அப்பூர்வ குடிகள் பட்ட இன்னல்கள் பல. அவர்களுள் இறந்தவர் பலர்;