பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. இளமையும் கல்வியும் (கி.பி.1809-1826) அமெரிக்காவின் மேற்குப் பாகத்தில் இருந்த காடு- களைத் திருத்தி விளை நிலங்களாக்கி வந்த வெள்- ளையர் பலர். காடுகளில் மரக் குடிசைகளை அமைத்துக் கொண்டு வேட்டையாடி வயிறு வளர்த்து வந்தவர் பலர். பலர் விறகு வெட்டிப் பிழைத்து வந்தனர். அவர்கள் இருந்த காடுகளில் செப்பனிடப்பட்ட பாதைகள் இல்லை; வேறு எத்தகைய வசதியும் இல்லை. மேலும், அவர்கள் உயிர் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்திலேயே இருந்தது.ஏனெனில், வெள்ளையரால் காட்டுக்கு ஒட்டப்பட்ட பூர்வ குடிகள் வெள்ளையர்மீது சினங் கொண்டு, அவர்களைக் கண்ட கண்ட இடத்தில் தாக்கி வந்தார்கள். அதனால், காட்டில் வாழ்ந்த ஒவ்- வொரு வெள்ளையனும் துப்பாக்கி வைத்திருந்தான். இங்ஙனம் காட்டில் வசித்து வந்த வெள்ளையருள் தாமஸ் லிங்கன் என்பவர் ஒருவர். அவர் தம் ஆருயிர் மனைவியாரோடு இன்பமாக வசித்து வந்தார். கெண்டகி என்னும் பிரதேசத்தில் இருந்த காட்டில் அவரது சிறிய மரக் குடிசை அமைந்திருந்தது. அஃது ஒரே அறையையுடையது ; ஒரே ஜன்னலையுடையது. அந்த ஜன்னல் கோடைக் காலத்தில் திறந்து வைக்கப்பட்- டிருந்தது; மழைக் காலத்தில் கரடித் தோலால் மூடப்பட்டிருந்தது. அதனால், மழைக் காலத்தில் அக்-