இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
, 12 அறிவிற் சிறந்து ஆற்றலில் மிகுந்து விளங்கின லிங்கன், தம் இடைவிடா ஊக்கத்தாலும் உழைப்பாலும் பல அரிய விஷயங்களை அறிந்துகொண்டார்; பல புதிய நூல்களைப் படித்தார். அவர் எத்தகைய கடினமான விஷயத்தையும் முற்றிலும் தெரிந்து கொண்ட பின்னரே விடக் கூடியவர்; எதனையும் அரை குறையாக விடாதவர். பள்ளிக்கூடம் மூடப்பட்ட பின்னரும் அவர் ஓயாமற் படித்துப் பல விஷயங்களைப் புதியன புதியனவாக அறிந்து வந்தார். கணக்குகளைப் போட்டுப் பழக்கப்படுதற்குக் காகிதம் இன்றிக் கரி தள்ளும் கருவியின் மீது அவர் க்குப் போட்டு வந்தார். அவரைப் போலக் கல்வி- யில் பேரூக்கம் கொண்டுள்ள இளைஞர் அல்லவோ வாழ்க்கையில் உயர் நிலையைப் பெறுவர்! கண