பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பல 16 ய- படகு நியூ ஆர்லியன்ஸ் நகரை நெருங்க நெருங்கப் படகுகள் ஆற்றிலே காணப்பட்டன. அவை யாவும் மக்களையும் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு நாநா பக்கங்களிலும் போய்க்கொண்டிருந்தன. அத்- துணைப் படகுகளுக்கும் போதுமான அகலமுடைய தாக மிசிசிப்பி நதி காணப்பட்டது, உலகம் மிகவும் விரிவானது என்ற எண்ணத்தை லிங்கனுக்கு உண்- டாக்கினது போல இருந்தது. இறுதியில் நியூ ஆர். லியன்ஸ் நகரம் கண்ணிற்பட்டது. படகைத் தக்க இடத்தில் நிறுத்திவிட்டு, லிங்கனும் அவருடன் சென்ற நண்பரும் நகருள் நுழைந்தனர். லிங்கன் அத்தகைய நகரை முன்னர்க் கண்டறியார். அந்நகர இரைச்சல் அவரைத் திகைப்படையச் செய்தது. பின்னர், ஆடவரும் பெண்டிரும் ஆடையணிகளால் தம்மை அழகுபடுத்திக்கொண்டு நடந்து சென்றது லிங்கனது கருத்தைக் கவர்ந்தது. காட்டில் எளிய வாழ்க்கையை நடத்தி வந்த இளைஞருக்கு நியூ ஆர்லி- யன்ஸ் நகரம் தேவ லோகம் போலக் காணப்பட்ட டதில் வியப்பு ஒன்றும் இல்லையன்றோ? அவர், தமது காலத்திற்குள் நியூஆர்லியன்ஸ் நகரில் மட்டும் அன்றி- அமெரிக்காவில் மட்டும் அன்றி - இப்பரந்த உலகிலேயே மிகச் சிறந்தவராகத் தாம் விளங்கப் போவதை அந் நிலையில் சிறிதும் உணர்ந்திலர். நியூ ஆர்லியன்ஸ் நகரை முழுவதும் சுற்றிப் பாரா- மல், லிங்கன் தமது வீடு நோக்கிப் பிரயாணமானார். அவர் வீட்டையடைந்து வழக்கம் போலத் தம் வேலை களைக் கவனித்து வந்தார். அப்பொழுது இல்லிநாய்ஸ்