பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 (Illinois) என்ற மாகாணத்திலிருந்து லிங்கன் உறவி- னர் ஒருவர் லிங்கன் குடும்பத்தாரை இல்லிநாய்ஸுக்கு வந்து குடியேறும்படி அழைத்தார். தாமஸ் லிங்கனும் இண்டியானாப் பிரதேசத்தை விட்டுப் புதிய இடத்திற் குடியேற வேண்டும் என்பதை விரும்பினார். எனவே, லிங்கன் குடும்பத்தார் இண்டியானாவை விட்டு இரு நூறு மைல் தூரத்தில் உள்ள இல்லிநாய்ஸ் என்ற மாகாணத்தை நோக்கிப் பிரயாணமாயினர். அக்காலத் தில் புகை வண்டித் தொடர்கள் இல்லை; மோட்டார் வண்டிகள் இல்லை. இங்கிலாந்தில் ஜார்ஜ் ஸ்டிபென்- ஸன் என்பார் முதன்முதல் புகை வண்டித் தொடரை அக்காலத்திலேதான் ஒட்டிக் காட்டினார். அமெரிக்கா - வில் கட்டை வண்டிகளே மிக்கிருந்தன. பாதைகள் செப்பனிடப்படாமையால், பிரயாணம் கஷ்டமாக இருந்தது. எனினும், இருபத்தொரு வயதுடைய லிங் கன் குதிரைகளை அடக்கி வண்டிகளை ஓடச் செய்தார். அனைவரும் சுகமாக இல்லிநாய்ஸ் மாகாணத்தை அடைந்தனர். அங்கிருந்தோர், லிங்கன் குடும்பத்- தாரை வரவேற்று, வேண்டிய உதவிகளைச் செய்தனர். புதிய வீடும் விரைவில் கட்டப்பட்டது. நாள் ஏப்ரஹாம் லிங்கன் இருபத்திரண்டாம் வயதில் ஒரு தமது எதிர் கால வாழ்க்கையைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் நண்- பர் ஒருவர் தம்முடைய படகில் தம்மோடு சேர்ந்து வேலை செய்யும்படி அவரை வேண்டினார். லிங்கன் அதற்கு உடன்பட்டுப் படகில் வேலை செய்து வந்தார். ஒரு முறை அப்படகு நியூ ஆர்லியன்ஸ் நகரையடைந் π-2