________________
.18 தது. லிங்கன் அந்நகருள் நுழைந்து, ஒவ்வொரு தெரு- த் வாகச் சுற்றிப் பார்த்து வந்தார். முடிவில் அவர் கடைத் தெருவில் நடந்து சென்ற போது திடுக்கிடக் கூடிய காட்சியொன்றைக் கண்டார். அவர் பட்ட மரம் போல அசைவற்று நின்றார். அவர் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வடிந்தது. அவரது மனத்தைப் புண்படுத்தின அக்கொடிய காட்சிதான் யாது? ஆ! அதுதான் நீங்கள் முதல் அதிகாரத் தொடக்கத்திற் படித்த அடிமை வர்த்தகம். அவர் அப்போது, 'இவ் வர்த்தகத்தையும் அடிமைத்தனத்தையும் என் ஆயுள் காலத்துக்குள் அடியோடு அகற்றுவேன்!' என்று சூள் உரைத்ததையும் அப்பகுதியில் நீங்கள் படித்தீர்- கள் அல்லவா? அடிமை வர்த்தகம் லிங்கனைப் பெரிதும் வாட்டி- னது. அழகிய தோற்றம் வாய்ந்த நியூ ஆர்லியன்ஸ் நகரில் இத்தகைய அநாகரிகச் செயல் நடைபெறும் என்பதை அவர் கனவிலும் நினைத்திலர். அவர் மனம் நெருப்பிற்பட்ட புழுப் போலத் துடித்தது; கண்கள் பருத்து முகம் கறுத்த நீக்ரோவரையும், நூற்றுக் கணக்கான வெள்ளையர் முன்னர் அவர்கள் அநாதை- களாக நின்றிருந்த பரிதாப நிலையையும் கண்டு, அவர் மனம் அழலில் இட்ட வெண்ணெயென உருகியது. இயற்கையிலேயே உயிர்களிடத்துப் பேரன்பு கொண்ட அவ்விளைஞர் இக்கொடிய காட்சியைக் கண்டதும் பிர- உலகில் சில மித்துவிட்டார். அப்பொழுதுதான் மக்கள் சுகப்படுகிறார்கள் என்பதையும் சிலர் துன்பப்- படுகின்றனர் என்பதையும் அவர் உணர்ந்தார். காருணி-