பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 யமே உருக்கொண்டு வந்தாலன்ன அப்பரம புருஷர் அமெரிக்காவினின்றும் அடிமைத் தளையை அடியோடு அகற்றுவதெனத் தீர்மானித்தார்; அதற்காகத் தம் ஆயுள் உள்ள வரையிற் போராடுவதென்றும் துணிவு கொண்டார். லிங்கன் வீடு திரும்பினதும், நியூ சாலெம் (New Salem) என்னும் கிராமத்தில் இருந்த சிறிய கடை- யின் நிருவாகஸ்தராக (Manager) அமர்ந்தார்; அவ்- வேலையை விரும்பிச் செவ்வையாக வியாபாரம் செய்து வந்தார். அவர் வேடிக்கையாகப் பேசின - தைக் கண்ட அந்தக் கிராமத்தார் அவரைப் பெரிதும் விரும்பினர். அவர்கள் ஓய்வு நேரங்களை லிங்க- னிடமே கழித்து வந்தார்கள். ஒரு முறை ஒருவர் சாமான் வாங்கிக்கொண்டு பணத்தை அதிகமாகக் கொடுத்துச் சென்றார். அதனை அறிந்த லிங்கன் உடனே அவரை விரட்டிச் சென்று, அத்தொகையை அவரிடம் கொடுத்துவிட்டார்; பின்னொரு முறை ஒரு பெண் பிள்ளைக்குக் குறைவாகத் தேயிலையைக் கொடுத்துவிட்டார்; ஆனால், பின்னர்த் தாம் செய்த குற்றத்தையுணர்ந்து, சரியான அளவுடைய தேயி- லையை உடனே எடுத்துச் சென்று, அம்மாதிடம் கொடுத்து மீண்டார். இத்தகைய சிறிய செயல்களி- லிருந்து, 'லிங்கன் மிகவும் யோக்கியமானவர்,' என்- னும் எண்ணம் அந்தக் கிராமத்தார்க்கு ஏற்பட்டது. அவர்கள் லிங்கனை மரியாதையோடும் பேரன்புடனும் நடத்தி வந்தார்கள்.