________________
4. வெளி உலக அனுபவம் (கி.பி. 1832-1842) நியூ சாலெம் கிராமத்தில் இருந்த கடை மூடப் பட்டது. லிங்கன் வீடு திரும்பினார். அப்பொ ழுது செவ்விந்தியருள் ஒரு பகுதியார் வெள்ளையர் மீது படையெடுத்து வருவதாகச் செய்தி கிடைத்தது. வெள்ளையர் அமெரிக்காவில் மிசிசிப்பி நதியைக் கடந்து, மேற்குப் பாகத்தையும் கைப்பற்றினர். எனவே, அங்கிருந்த செவ்விந்தியர் விரட்டப்பட்டனர். அப்- பாகம் செவ்விந்தியர் வேட்டையாடுமிடமாக இருந்- தது. அதனை வெள்ளையர் கைப்பற்றினதைக் கண்ட செவ்விந்தியர் மிக்க சினங் கொண்டனர். எனினும், இலட்சக்கணக்கான ஆயுதந் தாங்கின வெள்ளையரோடு போர் புரிய அவர்கள் துணியவில்லை. பாவம்!அவர்கள் சிறிது சிறிதாகத் தாங்கள் அனுபவித்து வந்த இடத் தைக் காலி செய்துகொண்டே மேற்கு நோக்கிச் சென்று, மிசிசிப்பி நதியையும் கடந்தார்கள். அங்கும் வெள்ளையர் சென்று துன்புறுத்தவே, அவர்கட்கு அடங்காக் கோபம் உண்டாயிற்று. எனினும், செவ்விந்தியத் தலைவர்கள், வேறு வழியில்- லாமல், இல்லிநாய்ஸ் மாகாணத்திற்கு வடக்கே உள்ள இடத்தை வெள்ளையருக்குக் கொடுத்து- விட்டதாக அமெரிக்க அரசாங்கத்தோடு ஓர் ஒப்பந் தம் செய்துகொண்டார்கள். அதற்குப் பதிலாக