பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 அவர்கள் வசிப்பதற்கு மிசிசிப்பி நதியின் மேற்- கில் உள்ள நிலப்பரப்பு விடப்பட்டது. எனினும், இத்தகைய உடன்படிக்கையைச் ‘சாக்ஸ்' (Sacs) என்னும் செவ்விந்திய வகுப்பாரின் தலைவன் ஒப்புக்- கொள்ளவில்லை. அவன் அஞ்சா நெஞ்சினன். அவன் வெள்ளையர்க்கு அடங்கி நடக்க முடியாதென்று கர்ச். சித்தான்; அவர்களைப் பழி வாங்குவதெனவும் தீர்- மானித்தான். அவனுடன் வேறொரு வகுப்பாரும் சேர்ந்துகொண்டனர். அவ்விரு வகுப்பாரும் மிசி - சிப்பி நதியைத் தாண்டி, வெள்ளையர் குடியேறியிருந்த கிராமங்களை நாசப்படுத்த முயன்றார்கள். ▸ இச்செய்தி லிங்கனுக்கு எட்டிற்று. அவர் ஆறடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்; நீண்ட உறுதி - யான கைகளையுடையவர்; பயம் என்பதை அறியாத - வர். அவர் தம் நண்பர்களை ஒன்று சேர்த்தார். அவர்கள் லிங்கனைத் தம் தலைவராக ஒப்புக்கொண்டார்- கள். அவர்கள் போரில் பழக்கப்படாத இளைஞர்கள் ; எனினும், தைரியம் உடையவர்கள். அவர்களை அழைத்துக்கொண்டு லிங்கன் செவ்விந்தியர் கலகம் செய்த இடத்தை அடைந்தார்; அங்குக் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தார். அவர், முன் கோபிகளான தம் வீரர்களைச் சமயோசிதமாக அடக்கி வந்தார். ஒரு முறை செவ்விந்தியன் ஒருவன் அவர்கள் இருந்த கூடாரத்திற்கு வந்தான். அவனைக் கண்டதும் வீரர்கள், "இவன் வேவுகாரன்! இவனைச் சுடுங்கள்! என்று பகர்ந்தார்கள். தனக்கு வந்த ஆபத்தையறிந்த