பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 செவ்விந்தியன் உடனே ஒரு பத்திரத்தைக் காட்டித் தான் வெள்ளையரின் நண்பன் என்றான்."என்ன! இப்- பத்திரம் எங்கள் அமெரிக்கச் சேனைத் தலைவரால் கை- யொப்பம் இடப்பட்டதன்று. அவர் கையொப்பத்- தைப் போல இது காணப்படினும், உண்மையில் இஃது அவரது கையொப்பம் அன்று. இவனை உட டனே சுட்டுத் தள்ளுங்கள்!" என்று வீரர்கள் கூறித் துப் பாக்கிகளை அவன் முகத்திற்கு நேராக நீட்டினார்கள். ஆ! அவ்வேளை லிங்கன் எழுந்து வீரர்கட்கும் செவ்- விந்தியனுக்கும் குறுக்கே நின்றார்."இவனை நாம் சுடக்- கூடாது," என்று நிதானமாகக் கூறினார். சிறிது நேரம் ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. பின்னர் ஒரு வீரன், "லிங்கன், நீ மிகவும் பயங்கொள்ளி," என்றான்.லிங்- கன் அமைதியாக, "அப்படி எவனேனும் நினைப்பானா- யின், பரீட்சை செய்துகொள்ளட்டும்,' என்றார். "நீ எங்களைவிடப் பெரியவனாயிருக்கிறாய்," என்றான் ஒரு வீரன்."எனினும், என்? உங்கள் ஆயுதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு என்றார் லிங்கன். சிறிது நேரம் அங்கு அமைதி நில விற்று. பின்பு ஒவ்வொருவராகத் துப்பாக்கியைக் கீழே தொங்கவிட்டனர். லிங்கன் சிறிது தாமதித்திருந்- திருப்பாராயின், பாவம்! அவ்வேழை இந்தியன் இரக்கங் காட்டாது சுடப்பட்டிருப்பான். லிங்கனைத் தவிர வேறு தலைவன் இவ்வாறு சுடக்கூடாதெனக் கட்டளையிட்டிருந்தாலும், அவ்வீரர்கள் அதனைக் கேளாமல்,சுட்டே இருப்பார்கள். இயற்கையிலேயே இரக்கக் குணமுடைய லிங்கன், முன்னர் அறியாத கை பார்க்கலாம்!'