________________
. 27 களைத் தம் மாகாணங்களிலேயே உயர்ந்த விலைக்கு விற்று வந்தன. வெளி நாட்டுச் சாமான்கள் குறைந்த வரியில் இறக்குமதியானால், தம் வியாபாரத்திற்குக் கேடு வரும் என்பதையுணர்ந்து, அம்மாகாணங்கள் வெளிநாட்டுப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் படி அரசாங்கத்தை வற்புறுத்தின. ஆனால், இந்த யோசனையைத் தென்மாகாணங்கள் ஆதரிக்கவில்லை. அவை பருத்தி முதலியவற்றைப் பயிர் செய்யும் மாகா ணங்கள். அங்கிருந்தோர் எளிய கிராம வாசிகள். வட மாகாணப் பொருள்களுக்கு விலை அதிகமானால், அவர்களால் வாங்க இயலாது. அதனால், அவர்கள், "வெளி நாட்டுப் பொருள்களுக்கு அதிகவரி விதிக்கக் கூடாது. அவை இறக்குமதியானாற்றான் வட மாகா- ணப் பொருள்கள் எங்கட்குக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அரசாங்கம் எங்கள் கோரிக்கைக்கு இணங்க வேண்டும்," என்று வாதாடினார்கள். இவ்விவாதம் வரவர மோசமாகி, முடிவில் 1832-ஆம் ஆண்டில்- அஃதாவது லிங்கன் தேர்- தலுக்குநின்ற சமயத்தில்- தென்கரோலினா மாகாணம் அமெரிக்க மாகாண ஐக்கியத்தினின்றும் பிரிந்துவிடத் தீர்மானித்தது. வெளி நாட்டுப் பொருள்களின் மீது அதிக வரி விதிக்கக் கூடாதென்பதே அம்மாகாணத்- தின் வேண்டுகோள். அதனை அமெரிக்க அரசாங்கம் நிறைவேற்றாவிடின், தான் பிரிந்துவிடுவதாக அம்- மாகாணம் பறை சாற்றினது. அவ்வளவே. வட மாகாணங்கள் விழித்தன. சிறந்த இராஜ தந்திரிகள் செய்வதறியாமல் தத்தளித்தார்கள். தென்கரோலினா