பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 28 ஐக்கியத்தினின்றும் பிரிவதை எவரும் விரும்பவில்லை. முடிவில் ஹென்றி க்ளே இரு பிரிவினர்க்கும் சமா- தானத்தையுண்டாக்க முன் வந்தார்; வெளி நாட்டுப் பொருள் மீது அதிகவரி விதிக்கக்கூடாதென அரசாங்- கத்துக்கு அறிவித்தார். வடமாகாணத்தாரும் அதற்கு உடன்பட்டனர். தென் கரோலினாவும் ஐக்கியத்தி- னின்றும் பிரியவில்லை. 6 இவ்வாறு நாட்டில் அமைதியை உண்டாக்கின மஹா வீரரான ஹென்றி க்ளேயினை அமெரிக்கா முழு- வதும் புகழ்ந்தது. லிங்கன் இத்தகராறுகளைக் கூர்ந்து கவனித்து வந்தார். க்ளே செய்த சமாதானத்தை அவர் பெரிதும் விரும்பினார். எப்பாடு படினும், எந்த மாகாணத்தையும் ஐக்கியத்தினின்றும் பிரிய விடக் கூடாது,' என்னும் ஹென்றி க்ளேயின் கொள்- கையை லிங்கன் பலமாக ஆதரித்தார். அன்று முதல் அவர் அதனையே தமது உயரிய லட்சியமாகக் கொண்- டார். இது நிற்க. தேர்தல் நடைபெற்றது. பதின்மூன்று பேர்- ஆனால், களில் நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்நால்வருள் ஒருவராக லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட- வில்லை. எனினும், தமது தோல்வியால் அவர் மனந் தளரவில்லை. நியூ சாலெம் கிராமத்து மக்கள் அவ- ருக்கு ஆறுதல் கூறினார்கள்; அடுத்த தேர்தலில் அவருக்கு வெற்றி ஏற்படுமாறு தாங்களே வேலை செய்வதாகவும் வாக்களித்தார்கள். ஏப்ரஹாம் லிங்கன் தேர்தலுக்குப் பின்னர் வேலை இன்றித் தவித்தார்; அக்கம் பக்கத்தாரிட்ட வேலை-