________________
அறிந்துகொண்டார். 30 இப்புதிய வேலை அவருக்கு மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கினது. ஏப்ரஹாம் லிங்கன் தபால் உத்தியோகஸ்தராக இருக்கையில் இருபத்தைந்து வயதுடைய மனிதராக இருந்தார். அவர் தமது வாழ்க்கையை ஆடம்பரமாக நடத்த ஒரு போதும் விரும்பினதில்லை. உண்ண உ உணவும் உடுக்க உடையும் படிக்க நூல்களுமே அவர் விரும்பினவை. உயிர் வாழக் குறைந்த முறையில் தேவையானவற்றையே அவர் விரும்பினார். தமக்கென ஒரு செப்புக் காசையும் அவர் வைத்திருந்ததில்லை. அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்- பட்டு வாஷிங்டன் நகருக்குப் போன போது தம் நண்பரிடமிருந்து கடன் வாங்கிச் சென்றார் எனின், அவரது எளிய வாழ்க்கையும், பணத்துக்கு அவர் அதிக மதிப்புக் கொடாதிருந்தமையும் நன்கு விளங்கு- கின்றன அல்லவா? 1834-ஆம் ஆண்டு இல்லிநாய்ஸ் மாகாணச் சட்ட சபைத் தேர்தல் நடைபெற்றது. சாங்கமன் தொகுதி- யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வருள் விங்கன் ஒருவராவர். அம்முறை அவர் பெருவெற்றி அடைந் தார். அவ்வெற்றியால் அவரது வாழ்க்கையில் மாறு- தல் ஏற்பட்டது. அவர் அதுவரையில் ஒரு கிராமத்- திற் பிரபலராக இருந்தாரே அன்றி, ஒரு மாகாணப் பிரபலராகவில்லை. ஆனால், தேர்தலால், அவர் மாகா- ணச் சட்ட சபையில் பல அறிஞர்களோடு அமர்ந்து பொதுஜன நிருவாகத்தைப் பற்றிப் பேசத் தக்க உயர் நிலையை அடைந்தார்.