பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வலையர் பாட்டு

பாட்டுக்கு வித்தவலை, பட்டாணிதான் ராயவலை, பட்டுமுண்டா செட்டியாரே? பவழம் உண்டா

பாண்டியரே? பட்டுவந் திறங்குதடி, பவழம்வந்த கப்பலிலே; முத்துவந் திறங்குதடி, முன்னேவந்த கப்பலிலே; கப்பல்குறி மாவிடிக்க ஒப்பேனேடி சுட்டுப்போட்டு.

வலை தோவல்

பொன்னை வாக்குப் போட்டாரே வாக்கு, இதுவல்ல வாக்கு? இன்னம்ஒரு வாக்கு: வாக்கிலே தணிந்து வாங்கடா பெரியாரு, தோவில் தணிந்து தோவும் பெரியாரு, தோவி எடுத்தேனே, தோளாசைப்பட்டுவலை.