பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகு தள்ளும் பாட்டு-2

தள்ளடா, தள்ளடா, படகைத் தண்ணிமேல் தள்ளடா; கச்சாங் காத்துக் கரைகொண் டடிக்குது; - கப்பல்ல முப்பல்ல மலையிலே பறக்குது; அச்சு முறிஞ்சது; ஆணி கழண்டது; நாகூரு வேலேயும் தரித்தண்டா வேலையும் ஒடிய பாய்வலித்து-அப்பனே-ஓடிய பாய்வலித்து

- (தள்ளடா)

பச்சைப் பவளமடா, பாரெங்கும் தோணுதடா பாலன் பிறந்தானே? (பால்குடிக்க வந்தானே?) தம்பி பிறந்தானே? தவ்னம்வந்த நாளேயிலே? நாளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை; தென்மதுரை போளுேமானல் தேசிகனக் காணலாமா? வடமதுரை போைேமால்ை வளர்த்தவனேக் காணலாமா? காணலாமா முன்எல்லாம் கச்சலா எடுகடட:

பார்க்கலாமா முன்னெல்லாம் பால்பானே ஏடுகட்ட? ஏடு தவரு து; எழுத்தானி கிருது: பண்ணினவன் பாவமது பாம்பாய்ப் புரளுருனே; பாம்பேரு மண்டபமோ? பத்துவிலாக் கோபுரமோ? கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க; சிதம்பரத்தைக் கண்டவங்க சேனைத்வம் செய்தவங்க. சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க, கும்பு பெருத்தவண்டா, குணங்கெட்ட ராவணங்க; ராவணன் சேனேன்ல்லாம் ராவாப் பயணமிடப் பாட்டாளி சேனையெல்லாம் பகலாய்ப் பயணமிடப் பயணம், பயணமடி பத்தாவுக் தான்பயணம்; சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்;