பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஏற்றப் பாட்டு

மானழுதாப் பேர்லே-அடிஉன்னே-மாமன் அடிச்சானே? மாமனடிக் கல்லை; ஒரு மனிதா தீண்ட வில்லை; (அடியே) புருசன் அடிச்சானே, ஒரு பெரப்பங்கழியாலே? புருசன் அடிக் கல்லே-ஒரு-பூதர் திண்டவில்லை : கொழுந்தன் அடிச்சானே, உன்னைக் கோல்தடியினலே? கொழுந்தனடிக் கல்லே, ஒருவரும் தீண்ட வில்லை; - - (நான்) வட்டியிலே போட்டசாதம் வாரித்தின்ன மைந்தன் இல்லை; - . . . . கிண்ணியிலே போட்டசாதம் (சுவாமி, கிறித் தின்னப்

புள்ளே இல்லை; . ாான், தண்ணிக்குப் போகையிலே (சுவாமி) தடம்மறிக்கப் - புள்ளே இல்லை; - - o ஊருக்குப் போகையிலே (சுவாமி) உடன்வரப்

புள் அளயில்லை; இந்த, அங்காடிக் கூடையை அமுைச்சுவர மைந்தனில்லை; வெங்காயக் கூடையை (சுவாமி விலைமதிக்க மைந்தன்

இல்லை; . . - - இந்த, மிழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே! மைந்தனடி காணுமே-நான்-மறுகி அழுகிறேனே!

5.

எட்டிப்பறி பூவை, விட்டுவிடு அரும்பை, தாவிப்பறி பூவை, தள்ளிவிடு அரும்பை: ஓடிப்பறி பூவை, ஒதுக்கிவிடு அரும்பை: தள்ளிவிட்ட அரும்பு தாய்ைமல ராதோ? ஒதுக்கிவிட்ட அரும்பு உடனேமல ராதோ? பூவைப்பிறியேனே, புள்ளையார்க்குச்சாத்த: காயைப்பறி யேனே, கந்தருக்குச்சாத்த? மொக்கைப்பறி யேனே, விக்னருக்குச்சாத்த? உனத்தொழுதேன் ராமா, ஒருபதியால் ஒண்னு. உலகத்தாயி மாரி, சதுரக்கூடைக்காரி, தாமுனு ராள் மாரி, தங்கக்கூடைக் காரி,