பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 7

எங்கும்பரா சக்தி, எல்லாம்ஆன ஒத்தி, - எல்லாம்ஆன ஒத்தி (அவள் ஈசுவரி உமையே): ஆதிபரா சக்தி, அங்காளம்மாள் தேவி, நெத்திப்பச்சைக் காரி, நெடுங்குண்ணத்து ஆயி, பொன்னுக்கூடைக் காரி (அவள் புறப்பட்டாளே மாரி; தங்கப்பொட்டுக் காரி, (அவள் தனித்துவந்தாள் மாரி, ஈசுவரி உமையே, (என்னை, ஈடேறக்கண் பாரும்; இருபதியால் ஒண்னு. - . இடியைப் போலப் பாணம் (அவர் விடுவார்.ரகு ராமர்; காற்றைப் போலப் பாணப் (அவர்) கனேகளைத்

தொடுப்பார்; - . . . . - மழையைப்போலப் பாணம் (அவர்) வரஅளிப்பார் சுவாமி: பொன்னைப்போலப் பானம் (அவர்) பூட்டினரே. தேவர்; ஒருவர்கண் ஒளிவு ஸ்வாமி, உலகம்பதி லுைம்; சீதைகண் ஒளிவு அந்தச் சீமைபதி லுைம்; முருகர்முன் நடக்க, முப்பதியால் ஒண்னு, - ம்ருகண்டரைப் போல்த் தவம்பண்ணினவர் இல்லை; ம்ருகண்ட ரிஷிக்கு (அவர்) முன்னேர் இட்ட சாபம்; பிள்ளே இல்லை என்று பெருந்தவங்கள் செய்தார். மைந்தன்இல்லை என்று மாளாத்தவம் செய்தார்; ம்ருகண்ட ரிஷிக்கு மார்க்கண்டர் பிறந்தார்; மார்க்கண்ட ரிஷிக்கு வயசுபதி றுை : வரமளித்தார் ஸ்வாமி, என்றும்பதி ருைய் : ஈரெட்டு வயசாய் ஈசுவரரும் தந்தார்; மார்க்கண்டனும் அப்போ ஆத்துமணல் சேர்த்து ஹரனைப்பூஜை செய்து ஈசுவரனைப் பார்த்தான். மார்க்கண்டனக் கொல்ல வாரான்எம ராஜன், காலது.ாதர் வந்து கட்டளைப் படியே கடுங்கோபம் ஆளுர்; கடுகடுத்து நின்ருர், ஈசுவரரும் பார்த்து ஏமனை உதைத்தார்; நாராயணு ராமா, காற்பதியால் ஒண்னு,