பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ஏற்றப் பாட்டு

நாணல் மேட்டைக் கொத்தி நந்தவனம் வச்சார்;
புத்துமேட்டைக் கொத்திப் பூஞ்செடியை வச்சார்;
கொல்லைமேட்டைக் கொத்திக் குடமல்லிகை வைத்தார்;
மோரவெளி கொத்தி முல்லைச்செடி வச்சார்;

முல்லைபறி பொண்ணே, முன்மடியைக் கோலி;
தாவிப்பறி பொண்ணே, தளரமடி கோலி;
முல்லையும் சிறிசு; முன்மடியும் பொத்தல்;
மல்லிகை பெரிசு, மார்மடியும் பொத்தல்;

நந்தவனம் பார்க்கக் கந்தர்இதோ வாரார்;
பூஞ்செடியைப் பார்க்கப் புண்ணியரும் வாரார்;
வெள்ளானைமேல் ஏறி வேலர்கட்ட வாரார்;
பொற்கரகம் தண்ணீர் பூவுங்கொண்டு வாரார்;
கற்பக விருட்சம் கையில்தாங்கிக் கொண்டார்;
ஊணினார் பிரம்பை, உள்ளங்கால் சிலம்பை,
பாதச்சிலம் பாடப் பயணமானார் சுவாமி,
ஐவர்பட்டம் ஆள, ஐம்பதியால் ஒண்ணு,

அண்ணாஉன் னாலே பண்ணினோம்வன வாசம்;
பன்னிரண்டு வருஷம் பாரவன வாசம்:
பதின்மூணாம் வருஷம் விராடபுரம் சேர்ந்தார்;
விராடராஜ ரண்டை வேஷங்களாய்ப் புகுந்தார்;
ஓங்குகுணக் கர்ணன் பல யோசனைகள் சொன்னன்;
விராடராஜன் மாட்டை மடக்கிவரச் சொன்னன்.
ஐவரில் ஒருவன் அர்ஜூனன் வருவான்;
ஆங்காரம் படைப்பான்; ஆர்படைக்கும் தோலான்;
பட்டாக்கத்தி மின்னப் படைகளெல்லாம் வெல்ல
மாட்டையுந் திருப்பி மன்னர்களை ஜயித்தான்;
கன்றையும் திருப்பிக் க்ர்ணன்தோற் றோடினான்;
இந்தமல்ல ரோடே ஈடுசெய்ய மாட்டோம்; -
இந்தமல்ல ரோடே போருக்கஞ்ச மாட்டோம்;
வந்தமல்ல ரோடே வாதுக் கஞ்ச மாட்டோம்;
ஹரிஹரிகோ விந்தா, அறுபதியால் ஒண்ணு.