பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 1 f

இதுதானே லங்கை ஆடிவா குரங்கே, இருட்டுவழி போனல் வெருட்டும்பனங் காடு; இது வோசுடு காடு? மலைக்குறவன் வீடு; இதுவோபெண்ணே யாறு? முழுகும் பொண்ணே,

போவோம்; இண்டைச்செடி தேடித் திரிஞ்சவ ளே போடி; இவளாரோ தோழி? பரியாசக் காரி, இடிகுமரி பெத்த வடிவழகோ பாலன்? ஈனஜாதி நந்தன் ஸ்வாமி பதம் சேர்ந்தான்; இருக்கவாடா வந்தே சமைக்கவாடா சாதம்? இருந்துடாதே பொண்ணே, மறந்துடாதே என்னே; இருளெப்போ தொலையும்? பொழுதெப்போ மலரும்? இருளாங்தை கூவும், மழைகாந்த லானல், இருசிகலி யாணம், அரிசிகலம் வேனும்; இருவாட்சி முல்லே பயிராகும் கொல்லே; இவளைத்தொட்ட தோஷம் எவிடம்போல்ை தீரும்? இந்திரன் பொறக்க இயமங்கர் நடுங்க, - முப்பதியால் நாலு. .* மூடுமுலைகிந்தம் தாயல்லவோ மாதா?. முட்டாளோடா தச்சன், முன்னேவல்ல ஏற்றம்? மூங்கில்வெட்டிச் சீவி முறங்கள் கட்டும் சாதி; முந்திரியும் பூக்கும், மந்திரிகள் தோட்டம்; முன்கொண்டாணி மேலே தங்கொட்டாதே காலை; முல்லைமல ராதோ? நல்லபனி நேரம்; - மூண்டுதப்பா சண்டை, பாண்டவர்கள் எங்கே? மூலபலத் தாலே ராமரெதிர்த் தாரே; முக்காவேரி பாயும், கைக்களவன் தோட்டம், முத்தி,உங்கள் அண்ணன் முடிச்சவிழ்த்த கள்ளன்; மூலையிலே நின்னு சேலைஇல்லை. என்ருள்; முன்பிறந்த பாலன் முலைக்கழுகி ருனே? முன்ஒருநாள் சீதை கண்டகனப்பொய்யோ? முன்னேமலட் டாறு பொண்னேமருட் டாதோ? முண்டைமக ளாலே கொண்டபொண்ணத் தோத்தான்;