பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 ஏற்றப் பாட்டு

மூடத்திலே வெள்ளி சாதிக்குதே மானம்;
மூடந்தன்னில் பெய்தால் நாடுசெய்த நன்மை;
மூச்சுடன்கண் ணாடி விற்குதுபொன் னாலே;
முடியவந்தா ளேனோ? அழுதபுள்ளை போட்டு;
முட்டத்தவன் செட்டி, மொளகுபயிர் இட்டான்;
துப்பத்தவன் எல்லாம் திருடவழி பார்த்தான்;
மூலமடை பள்ளம்; முனைகொண்டதே வெண்மை.
முள்ளிப்பள்ளம் ஜன்னல், வள்ளிப்பொண்ணோ காவல்;
முகூர்த்தமான வெள்ளி மேற்கேமுளை யாதோ?
நாற்பதியால் நாலு.

நல்லநடு ஜாமம் கள்ளர்வரும் வேளை,
நாய்குலைக்கக் கள்ளன் நடுத்தெருவே போனான்;
நாட்டுக்கதி காரி தோட்டிதலை யாரி;
நாணலோரம் கொல்லை, கூலிக்காரன் கொள்ளை;
நாணலின் மறைவாய்ப் போறபொண் சிவப்போ?
நாள் பொருத்தம் கேட்டு போய்ப்பரியம் போட்டான்.
நாணுறானே பாலன், தூங்குறானே ஏணை?
நாடலையும் போது ராமர்எங்கே போனார்? .
நியாயந்தானோ பொண்ணே? நானழைக்க உன்ன?
நானோடி கிழவன்? வேண்டாமோடி கணவன்?
நாத்தங்காலைச் சுத்தி நட்டவிளைவு முத்தி
நட்டாளே நடவை, போட்டாளே குறையாய்;


நாசமுற்ற மானம் பேய்ச்சலெங்கே, காணேன்?
நாடுதாண்டிப் போறான், மூடுபல்லக் கேறி;
நாடவ்வாளை வீசும், மணவாளன் ஏற்றம்;
நல்லவள் அழிஞ்சாள், பொண்மதி குலைஞ்சாள்;
நாடலையும் போது ராமரெங்கே போனார்?
நானோ உனக்குத் தேனோடி கரும்பு?
நட்சத்திரம் போலப் பெத்தாள்.ஒரு புள்ளை; -
நடைகுலுக்கிப் போனாள், விறகொடிக்கக் காட்டில்
அம்பதியால் நாலு