பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 13,

அம்பெடுத்தா தம்பி, அவர்சமத்தைப் பார்ப்போம்; வில்லெடுத்தா தம்பி, வீரியத்தைக் கேட்போம்; அம்பிருக்கக் கோட்டை அழிஞ்சதென்ன இப்போ? வில்லிருக்கக் கோட்டை சளேச்சதென்ன இப்போ? அம்பிருந்தால் என்ன? ஆளப்படை இல்லை; வில்இருந்தால் என்ன? வீரியங்கள் இல்லை; அங்கலாய்ப்பாய்ச் சொன்னுல் பொண்பொறந்த தென்ன? அம்பாரம் மணக்க வந்துதே மரக்கால்; அழகிட்டதோ பொண்ணே, கிழவனிட்ட மாலை? வரகா உணர்ந்தால்.... அன்னங்கள் அழுமோ, ஆண்மயிலைத் தேடி? அன்னமென்றிருந்தேன், அவள் கடந்த சாயல்; அந்தமில்லாக் கொண்டை ஆர்முடிச்சார் பொண்னே? அந்தமும் அழகும் சங்த்ரமதி தானே? அந்தமலே ஒரம் கந்தர்வரார் கோலம்; அண்ணனுக்கு வந்த பொண்எனக்குத் தாயார்; அண்ணைக்கேநான் சொன்னேன்(அவள்) ஆகாதென்று

பங்கு; அண்ணன்தம்பி வேனும், இன்னும் தம்பி ரானே. அங்கேஎன்ன கும்பல் ஆடுருனே தொம்பன்; அன்னமுண்ட தாலே, ஆண்டிவந்து போனன்; அம்பலத்தில் விட்டான், அறுபதியால் நாலு. அன்னக்கொடி ஓங்கும் சின்னத்துரை கப்பல், அலையுதவன் கப்பல், அடிக்கனம்போ தாதே! ஆனக்கலங் காரம், அழகுதிரு நாமம்; ஆனபோற வீதி (ரகு) ராமர் போருர் சாரி; ஆத்தாளும் மகளும் வேத்தாளுமாப் போன்; ஆறுள்ளது மேற்கே, அருங்கடல் கிழக்கே, அறத்தள்ளி இறைச்சால் ஆறல்லவோ வாய்க்கிால்? ஆத்தைகம்பித் தோழர் அளவாகட்ட ஏத்தம் அல்லியங் குளமோ? அழகுள்ள நதியோ? - அந்தமும் அழகும் சந்த்ரமதி தானே?